பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா கிடைத்தும் பாதை கிடைக்கல! பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, பெத்தேல் காலனியில், 1978ல், 38 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர்களை சுற்றி பட்டா நிலம் உள்ளது. அதில், போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்த நிலையில், சில ஆண்டாக பட்டாதாரர்கள், போக்குவரத்துக்கு தடை விதித்தனர். இதனால், அப்பகுதி மக்கள், போக்குவரத்துக்கு பாதை, சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாதை ஆக்கிரமிப்புகளை

ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, பெத்தேல் காலனியில், 1978ல், 38 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர்களை சுற்றி பட்டா நிலம் உள்ளது. அதில், போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்த நிலையில், சில ஆண்டாக பட்டாதாரர்கள், போக்குவரத்துக்கு தடை விதித்தனர். இதனால், அப்பகுதி மக்கள், போக்குவரத்துக்கு பாதை, சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய்த்துறையினர் ஒத்துழைப்பு தரவில்லை எனக்கூறி, நேற்று காலை, காடையாம்பட்டி தாசில்தார் அலுவலகம் முன், இ.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலர் அரியாகவுண்டர் தலைமை வகித்தார். அதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பாதை கேட்டு கோஷம் எழுப்பினர். முடிவில் தாசில்தார் அன்னபூரணியிடம் மனு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X