சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது பஸ் மோதல்: ரிக் தொழிலாளி பலி

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சேலம்: பைக் மீது அரசு பஸ் மோதியதில் ரிக் தொழிலாளி பலியானார். இச்சம்பவத்தால், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சேலம், சீலநாயக்கன்பட்டி, ஊத்துக்காட்டை சேர்ந்தவர் லோகநாதன், 26; ரிக் வண்டியில் வேலை செய்து வந்த இவர், எட்டு மாதங்களாக மத்திய பிரதேசத்தில் பணிபுரிந்து விட்டு, நேற்று சேலம் வந்தார். மாலை, ஹீரோ ?ஹாண்டா பைக்கில், நாமக்கல் மாவட்டம், எளச்சிப்பாளையத்தில் உள்ள பெற்றோரை

சேலம்: பைக் மீது அரசு பஸ் மோதியதில் ரிக் தொழிலாளி பலியானார். இச்சம்பவத்தால், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சேலம், சீலநாயக்கன்பட்டி, ஊத்துக்காட்டை சேர்ந்தவர் லோகநாதன், 26; ரிக் வண்டியில் வேலை செய்து வந்த இவர், எட்டு மாதங்களாக மத்திய பிரதேசத்தில் பணிபுரிந்து விட்டு, நேற்று சேலம் வந்தார். மாலை, ஹீரோ ?ஹாண்டா பைக்கில், நாமக்கல் மாவட்டம், எளச்சிப்பாளையத்தில் உள்ள பெற்றோரை பார்க்க புறப்பட்டார். சீலநாயக்கன்பட்டி பைபாஸில் சென்றபோது, சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. அதில், லோகநாதன் சம்பவ இடத்தில் பலியானார். அன்னதானப்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்தன. போக்குவரத்து போலீசார், சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X