பொது செய்தி

தமிழ்நாடு

டோக்கன் முறையில் கால்நடைகளுக்கு சிகிச்சை: கோபி பன்முக மருத்துவமனையில் புதுடெக்னிக்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கோபி: தொடர் சிகிச்சையளிக்க வசதியாக, கோபி பன்முக மருத்துவமனையில், டோக்கன் முறையில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் புதுயுக்தியை, மருத்துவ குழுவினர் கடைப்பிடிக்கின்றனர்.ஈரோடு மாவட்டம், கோபி, ல.கள்ளிப்பட்டி பிரிவில், 1967 ஆக.,11ல், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் துவங்கிய கால்நடை மருந்தகம், 2020 ஜனவரியில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில், பன்முக மருத்துவமனையாக தரம்

கோபி: தொடர் சிகிச்சையளிக்க வசதியாக, கோபி பன்முக மருத்துவமனையில், டோக்கன் முறையில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் புதுயுக்தியை, மருத்துவ குழுவினர் கடைப்பிடிக்கின்றனர்.


ஈரோடு மாவட்டம், கோபி, ல.கள்ளிப்பட்டி பிரிவில், 1967 ஆக.,11ல், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் துவங்கிய கால்நடை மருந்தகம், 2020 ஜனவரியில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில், பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு மருத்துவர் தலைமையில், நான்கு பேர் கொண்ட குழுவினர், ஷிப்ட் முறையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். கொரோனா பரவலால், சமூக விலகலை கடைப்பிடிக்கவும், நோயின் தன்மை அறிந்து, மறுநாள் தொடர் சிகிச்சை அளிக்கவும், மருத்துவ குழுவினர் டோக்கன் முறையில் சிகிச்சை அளிக்கும் முறையை துவக்கியுள்ளனர்.

இதுகுறித்து, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கால்நடைகளுக்கு உதவி மருத்துவ குழுவினர், சுழற்சி முறையில் சிகிச்சை அளிக்கும்போது, ஒரு மருத்துவர் மேற்கொள்ளும் சிகிச்சை முறை, மறுநாள் பணியில் இருக்கும் மருத்துவர் அறிய வசதியாக, டோக்கன் முறையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் யுக்தியை துவக்கியுள்ளோம். கால்நடை இனம், நோய் தாக்கம் மற்றும் சிகிச்சை முறை குறித்து, தனியாக பதிவேடு மூலம் விபரங்களை பதிவு செய்கின்றனர். இதனால், முதல் நாள் அளித்த சிகிச்சை முறை, மறுநாள் சிகிச்சை பார்க்கும் மருத்துவருக்கு எளிதாக அறிய முடிகிறது. மேலும், டோக்கன் முறையால், கொரோனா சமூக விலகலும் கடைப்பிடிக்க ஏதுவாக அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X