மக்களை தேடி மருத்துவம் திட்டம் இன்று துவக்கம்: தனி விமானத்தில் ஓசூர் வந்தார் முதல்வர் ஸ்டாலின்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் இன்று துவக்கம்: தனி விமானத்தில் ஓசூர் வந்தார் முதல்வர் ஸ்டாலின்

Added : ஆக 05, 2021
Share
ஓசூர்: ஓசூர் அருகே, 'மக்களை தேடி மருத்துவம்' என்ற புதிய திட்டத்தை துவக்கி வைக்க, நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் ஓசூர் வந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமனப்பள்ளியில், 'மக்களை தேடி மருத்துவம்' என்ற புதிய திட்டம், தனியார் நிறுவனங்களில் பொறுப்புணர்வு நிதியான, 7.40 கோடி ரூபாயில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திட்டம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று

ஓசூர்: ஓசூர் அருகே, 'மக்களை தேடி மருத்துவம்' என்ற புதிய திட்டத்தை துவக்கி வைக்க, நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் ஓசூர் வந்தார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமனப்பள்ளியில், 'மக்களை தேடி மருத்துவம்' என்ற புதிய திட்டம், தனியார் நிறுவனங்களில் பொறுப்புணர்வு நிதியான, 7.40 கோடி ரூபாயில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திட்டம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை, 9:50 மணிக்கு துவங்கி வைக்க உள்ளார். அத்துடன், பெட்டமுகிலாளம் மலை கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட மேலும் சில திட்டங்களை துவங்கி வைக்க உள்ளார். இதற்காக, நேற்று மாலை சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, ஓசூருக்கு, மாலை, 5:20 மணிக்கு வந்தார். அவருடன், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இருந்தார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி, எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ், மதியழகன் மற்றும் கட்சியியினர் வரவேற்றனர். அங்கிருந்து, காரில் புறப்பட்ட முதல்வர், பேலகொண்டப்பள்ளியிலுள்ள எம்.எல்.ஏ., பிரகாஷ் வீட்டிற்கு சென்றார். சமீபத்தில், அவரது மனைவி உயிரிழந்ததால், எம்.எல்.ஏ.,வுக்கு ஆறுதல் கூறி, அவரது மனைவியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பத்தலப்பள்ளி அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், நேற்று முதல்வர் ஓய்வெடுத்தார். இன்று, விழாவை முடித்து கொண்டு, காலை, 11:00 மணிக்கு புறப்பட்டு, தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X