பொது செய்தி

தமிழ்நாடு

ரயில், விமானம் மூலம் சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சேலம்: விமானம், ரயில் மூலம் சுற்றுலாத்திட்டங்களை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி., பாரத தரிசனம் சிறப்பு ரயில் மூலம், கோவா, சர்தார் படேல் சிலை, ஜெய்ப்பூர், டில்லி, ஆக்ரா, ஹைதராபாத் ஆகிய இடங்களை காண ஏற்பாடு செய்துள்ளது. 12 நாள் கொண்ட இந்த சுற்றுலா ரயில், ஆக., 15ல் மதுரையிலிருந்து

சேலம்: விமானம், ரயில் மூலம் சுற்றுலாத்திட்டங்களை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி., பாரத தரிசனம் சிறப்பு ரயில் மூலம், கோவா, சர்தார் படேல் சிலை, ஜெய்ப்பூர், டில்லி, ஆக்ரா, ஹைதராபாத் ஆகிய இடங்களை காண ஏற்பாடு செய்துள்ளது. 12 நாள் கொண்ட இந்த சுற்றுலா ரயில், ஆக., 15ல் மதுரையிலிருந்து தொடங்குகிறது. ஒருவருக்கு கட்டணம், 12 ஆயிரம் ரூபாய். திருப்பதி, காளஹஸ்திக்கு, 3 நாள் சுற்றுலாவுக்கு, ஆக., 28ல், கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே புறப்பட உள்ளது. சுற்றுலா கட்டணம், 6,685 ரூபாய். தொடர்ந்து அக்டோபர் முதல், திருப்பதி, காளஹஸ்திக்கு, ஒவ்வொரு வாரமும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. செப்., 11ல், கோவையில் இருந்து விமானம் மூலம், காசி, அலகாபாத், கயா ஆன்மிக சுற்றுலாவில், விமான கட்டணம், நட்சத்திர ஓட்டலில் தங்குமிடம், ஏசி, போக்குவரத்து, காலை, இரவு உணவு, ஜி.எஸ்.டி., உள்பட, 27 ஆயிரத்து, 460 ரூபாய் கட்டணம். அக்., 2 முதல், கோவையில் இருந்து விமானம் மூலம், ஜெய்ப்பூர், ஆக்ரா, டில்லி விமான சுற்றுலாவுக்கு, 26 ஆயிரத்து, 60 ரூபாய் கட்டணம். மத்திய மாநில அரசு ஊழியர்கள், எல்.டி.சி., சலுகைகளை பெறலாம். விபரம், முன்பதிவுக்கு, 'ஐ.ஆர்.சி.டி.சி., கோவை அலுவலகம், மாருதி டவர், அரசு மருத்துவமனை எதிரே, கோவை' என்ற முகவரி, 8287931965, 9003140655 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X