பொது செய்தி

தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தடை

Added : ஆக 05, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 8 வரை சுவாமி தரிசனம் செய்ய தடை நீட்டித்து, கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு விழாக்களால், கொரோனா தொற்று பரவல் அதிகமாகக் கூடாது என்ற காரணத்தால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 1 முதல், 3 வரை மூன்று நாட்கள், பக்தர்கள் சுவாமி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 8 வரை சுவாமி தரிசனம் செய்ய தடை நீட்டித்து, கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு விழாக்களால், கொரோனா தொற்று பரவல் அதிகமாகக் கூடாது என்ற காரணத்தால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 1 முதல், 3 வரை மூன்று நாட்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும், 8 வரை தடை நீட்டிக்கப்படுகிறது. இதேபோல் மாவட்டத்திலுள்ள, முக்கிய கோவில்களிலும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவிலில் வழக்கம்போல், அனைத்து பூஜைகளும் ஆகம விதிப்படி நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X