பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலில் செருப்பு அணிந்து பெண் டாக்டர் உட்கார்ந்ததால் வாக்குவாதம்

Added : ஆக 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலூர்: வேலூர் அருகே, கொரோனா தடுப்பூசி முகாம் நடந்த கோவிலில், செருப்பு அணிந்து பெண் டாக்டர் உட்கார்ந்ததால், பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேலூர் அருகே, பொய்கை பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் நேற்று காலை தடுப்பூசி முகாம் நடந்தது. வேலூர் அரசு மருத்துவமனையை சேர்ந்த ரெஜினா என்ற பெண் டாக்டர், செருப்பு அணிந்து கொண்டு கோவில் கருவறை முன் உட்கார்ந்து

வேலூர்: வேலூர் அருகே, கொரோனா தடுப்பூசி முகாம் நடந்த கோவிலில், செருப்பு அணிந்து பெண் டாக்டர் உட்கார்ந்ததால், பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேலூர் அருகே, பொய்கை பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் நேற்று காலை தடுப்பூசி முகாம் நடந்தது. வேலூர் அரசு மருத்துவமனையை சேர்ந்த ரெஜினா என்ற பெண் டாக்டர், செருப்பு அணிந்து கொண்டு கோவில் கருவறை முன் உட்கார்ந்து கொண்டிருந்தார். தடுப்பூசி போட வந்தவர்கள், பக்தர்கள் அவரிடம்,' ஏன் செருப்பு அணிந்து உட்கார்ந்திருக்கிறீர்கள், கழற்றி விட்டு வாருங்கள்' என,கூறினர். அதற்கு அந்த டாக்டர், 'இங்கு செருப்பு அணிந்து வர வேண்டாம் என்று போர்டு வைத்துள்ளார்களா' என, கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. டாக்டரை வெளியேற்றினால் தான், தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என அங்கு வந்தவர்கள் கூறினர். இதனால் டாக்டர் ரெஜினா, முகாமை விட்டு பாதியில் வெளியேறினார். பின் டாக்டர் ரெஜினா செய்த தவறுக்கு, தாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அங்கிருந்த செவிலியர்கள் கூறியதால், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BSPILLAI -  ( Posted via: Dinamalar Android App )
05-ஆக-202115:58:40 IST Report Abuse
BSPILLAI Doctor is well educated.Associated with Education, mind should get cultivated. Respect for others hand their belief should not be offended at any cost. If she did not know the religious customs, it is alright, but once brought to her notice, as educated person, she could have asked apology and removed the shoes. Not doing so only reveals the adamant nature. " Katradu kai alavu, Kallaaladu Ulagalavu" It is customary for Indians to remove the footwear and enter any Place of Worship. In Gurudwara, well educated and even highly placed occupying high jobs and CEOs are humbly collecting the visitors footwear and polish them and hand it over, when you return after paying your respect and prayers.When I visited on tour to Europe, I removed my shoes before entering the Church. Place of Worship is visited for getting Peace. It should never be converted as a platform to offend the belief and sentiment of others.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X