சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவிக்கு காதல் டார்ச்சர்: அ.தி.மு.க., பிரமுகர் கைது

Added : ஆக 05, 2021
Share
Advertisement
குடியாத்தம்: குடியாத்தத்தில், பிளஸ் 2 மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்த, அ.தி.மு.க., பிரமுகரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் கவுதம், 27. இவர் வேலூர் புறநகர் குடியாத்தம் நகர, அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைத்தலைவராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும், 16 வயது மாணவியை மொபைல்போனில் தொடர்பு கொண்டு,

குடியாத்தம்: குடியாத்தத்தில், பிளஸ் 2 மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்த, அ.தி.மு.க., பிரமுகரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் கவுதம், 27. இவர் வேலூர் புறநகர் குடியாத்தம் நகர, அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைத்தலைவராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும், 16 வயது மாணவியை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை காதலிக்கும்படி டார்ச்சர் கொடுத்து மிரட்டல் விடுத்துள்ளார். முகநூல் பக்கத்தில் மாணவியின் புகைப்படத்தை, வேறு மாதிரியாக சித்தரித்து தவறான தகவல்களை பதிவு செய்து வந்துள்ளார். இது குறித்து மாணவி கொடுத்த புகார்படி, குடியாத்தம் மகளிர் போலீசார் போக்சோவில் கவுதமனை, நேற்று கைது செய்து குடியாத்தம் கிளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து கவுதமனை, அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X