அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் 4,000 காலிபணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் சக்கரபாணி

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021
Share
Advertisement
வேலூர்: ரேஷன் கடைகளில் 4,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று(ஆக-5) 'மக்களை தேடி மருத்துவம் திட்டம்' துவக்க விழா மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் துறை சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 40 லட்சம் மெட்ரிக் டன்
ரேஷன் கடைகளில் 4,000 காலிபணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் சக்கரபாணி

வேலூர்: ரேஷன் கடைகளில் 4,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று(ஆக-5) 'மக்களை தேடி மருத்துவம் திட்டம்' துவக்க விழா மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் துறை சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது 7 லட்சம் பேர் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அவற்றில் மூன்றரை லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன.


latest tamil news


தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் சிறப்பு தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 937 டன் அரிசி மற்றும் 7 ஆயிரத்து 253 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 28 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் 7,500 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்குவதற்கு தமிழக முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் சுமார் 8000 நியாயவிலைக் கடைகள், வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது அவற்றை சொந்தக் கட்டடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் சுமார் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போலியாக செயல்பட்டுவரும் குளிர்பான தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றினை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X