அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று (ஆக.,5) காலமானார். அவருக்கு வயது 80.அதிமுகவில் தற்போது அவைத்தலைவராக உள்ள மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவ்வபோது சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்னையை
ADMK, Madhusudhanan, Died, அதிமுக, மதுசூதனன், காலமானார், அவைத்தலைவர்

சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று (ஆக.,5) காலமானார். அவருக்கு வயது 80.

அதிமுகவில் தற்போது அவைத்தலைவராக உள்ள மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவ்வபோது சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்னையை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஜூலை 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமானதுடன், வென்டிலேட்டர் உதவியுடனும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.


அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த மாதம் 18 ம்தேதி மதுசூதனனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிலைமை மோசமானதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று மாலை உயிர் பிரிந்தது. 2007ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவராக மதுசூதனன் பதவி வகித்து வந்தார். சிறு வயதிலேயே எம்ஜிஆரின் ரசிகர் மன்றத்தை தொடங்கியவர். வடசென்னையின் முக்கிய அரசியல்தலைவராக விளங்கினார். 1991ல் ஆர்கே நகர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 முதல் 1996 வரை கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2017 ல் அதிமுக இரண்டாக உடைந்தபோது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்தார். சசிகலாவை கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Chennai #ADMK #Madhusudhanan

latest tamil newsஇந்நிலையில் சிகிச்சை பலனின்றி உடல்நலக்குறைவால் இன்று மாலை காலமானார். அவருக்கு அதிமுக எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2007 ம் ஆண்டு முதல் அதிமுக அவைத்தலைவராக மதுசூதனன் செயல்பட்டு வருகிறார். அவர் இருக்கும் வரை அவர் தான் அவைத்தலைவர் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி அவைத்தலைவர் மாற்றப்படவில்லை. கடந்த 1991ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற மதுசூதனன், அப்போதைய ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக பணியாற்றினார்.

கடந்த 2017 ம் ஆண்டு, அதிமுக இரண்டாக பிரிந்த போது, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருந்தார். இரு அணிகள் இணைந்த போது, அதிமுக சின்னத்தை மதுசூதனனிடம் தேர்தல் ஆணையம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
06-ஆக-202108:50:52 IST Report Abuse
arudra1951 நாட்டுக்கு மிகவும் நல்லது
Rate this:
Cancel
05-ஆக-202121:09:40 IST Report Abuse
குமார் இவர் அதிமுகவின் உண்மையான விசுவாசி, அப்பட்டமானவர் ,எந்த நிலையிலும் மாற்றுக் கட்சிக்கு செல்லாதவர். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
Ramachandran V - Chennai,இந்தியா
05-ஆக-202118:16:35 IST Report Abuse
Ramachandran V எந்த அரசியல்வாதி யாவது அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டதாக வரலாறு இருக்கிறதா?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-ஆக-202123:48:03 IST Report Abuse
தமிழவேல் ஒரு கம்மி சமீபத்தில அரசு மருத்துவ மனைக்கு போயிருக்கிறதா செய்தி வந்துச்சே......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X