மல்யுத்தத்தில் வெள்ளி வென்றார் ரவிக்குமார்; இந்தியாவுக்கு 5வது பதக்கம்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெள்ளி வென்றார் ரவிக்குமார். பைனலில் ரஷ்யாவின் ஜாவுரிடம் 4-7 என தோல்வியடைந்தார். ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. மல்யுத்தம் ஆண்கள் 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா, 23, களமிறங்கினார். இதில் ரஷ்யாவின் ஜாவுர் உகுவேவை 26, எதிர்கொண்டார். மொத்தம் 6 நிமிட போட்டி, தலா 3 நிமிடம் கொண்ட இரு
Olympics, Wrestling, IND, Ravikumar, ஒலிம்பிக், மல்யுத்தம், இந்தியா, ரவிகுமார், வெள்ளி,

டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெள்ளி வென்றார் ரவிக்குமார். பைனலில் ரஷ்யாவின் ஜாவுரிடம் 4-7 என தோல்வியடைந்தார்.

ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. மல்யுத்தம் ஆண்கள் 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா, 23, களமிறங்கினார். இதில் ரஷ்யாவின் ஜாவுர் உகுவேவை 26, எதிர்கொண்டார். மொத்தம் 6 நிமிட போட்டி, தலா 3 நிமிடம் கொண்ட இரு 'பீரியடு' ஆக நடத்தப்பட்டது. கடைசியாக பங்கேற்ற 15 சர்வதேச தொடர்களில், 12 தங்கம் உட்பட 14 பதக்கம் வென்றவர் ஜாவுர். தவிர 2 முறை உலக சாம்பியன் ஆனவர் என்பதால் ரவிக்குமார் மிக எச்சரிக்கையாக மோதினார்.


latest tamil news


ஆனால் தொடர்ந்து 15 போட்டிகளில் வென்ற வேகத்தில் வந்த ஜாவுர், முதல் 'பீரியடில்' 2 புள்ளியை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இவர் 4-2 என முந்தினார். இரண்டாவது 'பீரியடில்' ரவிக்குமார் ஆதிக்கம் செலுத்துவார் என நம்பப்பட்டது. மாறாக ரவிக்குமார் பிடியில் இருந்து எளிதாக நழுவினார் ஜாவுர். ஒருகட்டத்தில் ரவிக்குமார் 4-7 என பின்தங்கினார். கடைசி நேரத்தில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை ரவிக்குமார் மீளவே இல்லை. முடிவில் 4-7 என தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.


தீபக் புனியா 'ஷாக்'


ஆண்கள் 86 கிலோ 'பிரீஸ்டைல்' மல்யுத்தத்தில் இந்தியாவின் தீபக் புனியா, அரையிறுதியில் தோற்றதால் 'ரெப்பிசேஜ்' வாய்ப்பில் வெண்கல பதக்கத்திற்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சான் மரினோவின் நஜீம் மைலசை சந்தித்தார். முதல் 'பீரியடில்' தீபக், 2-1 புள்ளி பெற்று முன்னிலை பெற்றார். இரண்டாவது 'பீரியடு' முடிய 6 வினாடிகள் இருந்த போது, 3-5 என பின்தங்கிய தீபக், வெண்கல பதக்கத்தை கோட்டை விட்டார். இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இந்தியா இதுவரை மொத்தம் 2 வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
05-ஆக-202121:29:43 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் வாழ்த்துக்கள் வழக்கமா பகோடா, சங்கின்னெல்லாம் கதறுகிறவன் எவனுமே, இது போன்ற செய்திகளுக்கு வாழ்த்து சொல்ல வருவதில்லை இதை எத்தினி பேரு கவனிச்சீங்க ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
05-ஆக-202120:30:19 IST Report Abuse
Ramesh Sargam வெள்ளி பதக்கம் வென்ற வீர மகன் ரவிக்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
05-ஆக-202118:49:18 IST Report Abuse
Balaji வாழ்த்துக்கள்... இவர்களை வாழ்க்கை பாடமாக பள்ளிகளில் வைக்க வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X