ஈமு கோழி மோசடி வழக்கு; கொங்கு பேரவைத் தலைவர் யுவராஜ் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் கொங்கு பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ் உட்பட மூவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் யுவராஜ். கொங்கு பேரவை அமைப்பின் தலைவராக இருந்த இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், 'சுதி ஈமு பார்ம்' என்ற நிதி நிறுவனத்தை நடத்தினார். ஈமு கோழி வளர்ப்பு முதலீட்டுத் திட்டத்தில் அதிக
கொங்கு பேரவை, யுவராஜ், ஈமு கோழி, மோசடி, சிறை

கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் கொங்கு பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ் உட்பட மூவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் யுவராஜ். கொங்கு பேரவை அமைப்பின் தலைவராக இருந்த இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், 'சுதி ஈமு பார்ம்' என்ற நிதி நிறுவனத்தை நடத்தினார். ஈமு கோழி வளர்ப்பு முதலீட்டுத் திட்டத்தில் அதிக வட்டி தருவதாக கூறி 156 பேரிடம், ரூபாய் 2 கோடி 70 லட்சம் மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் கடந்த 2012ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக யுவராஜ் மற்றும் பங்குதாரர்கள் தமிழ்நேசன், வாசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



latest tamil news


கோவை டான்பிட் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்ற இவ்வழக்கில் இன்று (ஆகஸ்ட் 5) தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ், தமிழ்நேசன், வாசுவிற்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 2 கோடி 47லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
06-ஆக-202104:13:28 IST Report Abuse
meenakshisundaram சத்திய (?) ராஜ் ? அப்போ எல்லா திராவிடனும் ஏமாற்று காரர்கல் தானா -சொல்லவே இல்லை?
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
06-ஆக-202101:14:41 IST Report Abuse
LAX வந்தியத்தேவன், தீர்ப்பிலிருந்து தப்பிக்கத்தான் பலரும்/பல கட்சிகளைச் சேர்ந்தோறரும் தற்போது, விஞ்ஞான ஊழல் குழுமத்தில் தங்களை ஐக்கியமாக்கிக் கொண்டு.. கோஷம் போடுறாங்க போல..
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
05-ஆக-202120:00:13 IST Report Abuse
jagan சத்யராஜ் என்கிற ரங்கராஜ் கூட இவுங்க கூட்டாளிதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X