ஆக.,5 வரலாற்றில் நினைவு கூறப்படும்: பிரதமர் மோடி| Dinamalar

ஆக.,5 வரலாற்றில் நினைவு கூறப்படும்: பிரதமர் மோடி

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (10) | |
புதுடில்லி: காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டல் மற்றும் ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றதற்காக, ஆக.,5 ம் தேதி என்றும் வரலாற்றில் நினைவு கூறப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா தினத்தை முன்னிட்டு, பயனாளிகளுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.அப்போது அவர்
Narendramodi, Primeminister, PMModi, Pm, modi, august5, hockey, kashmir, ramar temple

புதுடில்லி: காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டல் மற்றும் ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றதற்காக, ஆக.,5 ம் தேதி என்றும் வரலாற்றில் நினைவு கூறப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.



பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா தினத்தை முன்னிட்டு, பயனாளிகளுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.



அப்போது அவர் பேசியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இதேநாளில் (ஆக.,5) தான் காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதேநாளில், ராமர்கோயில் கட்டுவதற்கு முதல் நடவடிக்கையாக, அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது.பட்டியல் அடிப்படையில் இல்லாமல், பதக்கங்கள் வெல்வதன் அடிப்படையில் புதிய இந்தியாவிற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இதன்மூலம் ஒருவரின் வெற்றியானது அவரின் கடுமையான உழைப்பின் மூலமே கிடைக்குமே தவிர, குடும்பத்தினரால் கிடைக்காது தெரிய வருகிறது. இந்திய இளைஞர்கள் முன்னேறி வருகின்றனர். வளர்ச்சி பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



தொடர்ந்து, உணவு பாதுகாப்பு திட்ட பயனாளர்களுடன் கலந்துரையாடுகையில், மோடி பேசியதாவது: நாட்டை வளர்ச்சி பாதையில் செல்வதை எதிர்க்கட்சிகள் தடுக்க முடியாது. பார்லிமென்டில் பணிகள் நடப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. வளர்ச்சி பாதையில் செல்வதை தடுப்பதே, எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கம் ஆகும். அக்கட்சிகளின் நடவடிக்கை தேச விரோதம். ஒரு பக்கம், நாட்டிற்கு கோல்களுக்கு மேல் கோல் கிடைக்கிறது. மறுபுறம், அரசியல் லாபத்திற்காக கட்சிகள், சுயநலமாக செயல்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X