பொது செய்தி

இந்தியா

மாநிலங்களின் கையிருப்பில் 2.69 கோடி தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 2.69 கோடி கோவிட் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரத்துறை இன்று (ஆக., 5) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு

புதுடில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 2.69 கோடி கோவிட் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news



மத்திய சுகாதாரத்துறை இன்று (ஆக., 5) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது.அதன்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 51,01,88,510 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அதில், 48,60,15,232 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்துள்ளன. மேலும், 2,69,06,624 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளன.


latest tamil news



கூடுதலாக 7,53,620 தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டு உள்ளன. மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 48.93 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
05-ஆக-202120:28:39 IST Report Abuse
Ramesh Sargam மாநில அரசுகள் தங்களிடம் இருக்கும் தடுப்பூசிகளை முறையாக மக்களுக்கு போடவேண்டும். அதிலும் ஊழல் செய்ய கூடாது. இப்பொழுது நண்பர் ஒருவர் மூலம் அப்படி ஊழல் நடப்பதாக நான் அறிந்தேன். அதவாது, மாநிலங்கள் தங்களிடம் உள்ள தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளுக்கும், மற்ற பிற வெளி ஆட்களுக்கும் அதிக விலைக்கு விற்று, பணம் சம்பாதிப்பதாக. இது எவ்வளவு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால், இப்படி நடக்கவும் வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது. நம்நாட்டில் 'செத்த பிணத்தை' வீதியில் கிடத்தி அரசியல் செய்வார்கள் அரசியல்வாதிகள். அதேபோல் தடுப்பூசியிலும் ஊழல் செய்ய வாய்ப்பிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X