மாநிலங்களின் கையிருப்பில் 2.69 கோடி தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாநிலங்களின் கையிருப்பில் 2.69 கோடி தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 2.69 கோடி கோவிட் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரத்துறை இன்று (ஆக., 5) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு

புதுடில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 2.69 கோடி கோவிட் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news



மத்திய சுகாதாரத்துறை இன்று (ஆக., 5) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது.அதன்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 51,01,88,510 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அதில், 48,60,15,232 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்துள்ளன. மேலும், 2,69,06,624 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளன.


latest tamil news



கூடுதலாக 7,53,620 தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டு உள்ளன. மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 48.93 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X