கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு; மத்திய அரசு| Dinamalar

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு; மத்திய அரசு

Added : ஆக 05, 2021 | கருத்துகள் (2) | |
புதுடில்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) அறிக்கையின்படி நடப்பு ஆண்டு ஜூன் 30 வரை 30 ஆயிரத்து 71 குழந்தைகள், கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனர். இதற்கிடையே பிஎம்
Covid, Orphaned Children, Health Insurance, Anurag Thakur, கோவிட், ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோர், மருத்துவ காப்பீடு, மத்திய அரசு, அனுராக் தாக்கூர்

புதுடில்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) அறிக்கையின்படி நடப்பு ஆண்டு ஜூன் 30 வரை 30 ஆயிரத்து 71 குழந்தைகள், கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனர். இதற்கிடையே பிஎம் கேர்ஸ்-ல் குழந்தைகளுக்கான நலத்திட்டம் கடந்த மே 29-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம், கொரோனாவில் தாய், தந்தை இருவரையும் இழந்த அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் நலன் காக்கும் திட்டமாகும். மேலும் இவர்களுக்கு 23 வயதை எட்டும்போது ரூ.10 லட்சம் வழங்குதல், மாதந்தோறும் உதவித்தொகை என்பதை நோக்கமாக கொண்டுள்ளது.


latest tamil news


இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: கொரோனா தொற்றால் பெற்றோரை அல்லது காப்பாளர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு 18 வயதுவரை ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் ஆயுஷ்மான் பாரத் மூலம் செயல்படுத்தப்பட்டு அதற்கான காப்பீடு தொகை பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் செலுத்தப்படும். கொரோனாவால் பெற்றோரை அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைக்கு 18 வயது வரை மாத உதவித்தொகையும், 23 வயது அடையும்போது ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X