ஜெனிவா: 'கோவிட் தொற்றிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல்நல பிரச்னைகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்து உள்ளதாவது: உலகம் முழுவகும் 20 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தொற்றில் இருந்து மீண்ட பிறகு எழும் உடல் நில பிரச்னைகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால் தொற்றிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல்நல பிரச்னைகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
நீண்ட நாள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றிலிருந்து மீண்ட பிறகு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்கள் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு நாட்கள் வரை இப்பிரச்னைகள் நீளும் என, எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து மேலும் புரிந்து கொள்ள, ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE