ஆசிரியர்களில் எஸ்.ராமஸ்வாமி ஒரு கலங்கரை விளக்கம்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும்மதுரை மக்களைப் பொறுத்தவரை தங்களது பிள்ளைகளை எப்படியாவது டிவிஎஸ் பள்ளியில் சேர்த்து படிக்கவைக்க வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும்அந்தப் பள்ளியில் இடம் கிடைத்து சேர்த்துவிட்டால் போதும் அதன் பிறகு அந்தப் பிள்ளையின் எதிர்காலம் பற்றி கவலைப்பட வேண்டாம்.அந்த அளவிற்கு அங்கு படிக்கும் பிள்ளைகளைlatest tamil newsஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும்
மதுரை மக்களைப் பொறுத்தவரை தங்களது பிள்ளைகளை எப்படியாவது டிவிஎஸ் பள்ளியில் சேர்த்து படிக்கவைக்க வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும்
அந்தப் பள்ளியில் இடம் கிடைத்து சேர்த்துவிட்டால் போதும் அதன் பிறகு அந்தப் பிள்ளையின் எதிர்காலம் பற்றி கவலைப்பட வேண்டாம்.
அந்த அளவிற்கு அங்கு படிக்கும் பிள்ளைகளை கல்வியில்,அறிவில்,விளையாட்டில்,ஒழுக்கத்தில்,சிறப்புத் திறன்களில் மேலோங்கச் செய்துவிடுவர்.உயர்கல்வி மற்றும் வேலையில் சேர்வதற்கு இந்தப் பள்ளியில் படித்தவர் என்ற ஒரு தகுதி போதும்.
இத்துணை சிறப்பு மிக்கதான இந்தப் பள்ளி மாற பலமான அடித்தளம் அமைத்தவர் இந்த பள்ளியின் ஆரம்பகாலம் தொட்டு தொடர்ந்து 21 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக இருந்த எஸ்.ராமஸ்வாமி.
மறைந்த எஸ்.ராமஸ்வாமியின் நுாற்றாண்டு விழா வருகின்ற பத்தாம் தேதி (10/08/2021)வருகிறது இதனை உலகம் முழுவதும் உன்னத நிலையில் உள்ள அவரது மாணவர்கள் கொண்டாட இருக்கின்றனர்.


latest tamil news


விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் பிறந்தவரான எஸ்.ராமஸ்வாமி படிப்பில் சிறந்து விளங்கினார் கணிதத்தில் புலி என வர்ணிக்கப்பட்டார் ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் பதக்கம் பெற்றவர்.
படித்து முடித்த உடனேயே மதுரையில் உள்ள எம்சி பள்ளியில் கணக்கு ஆசிரியர் வேலை அங்கிருந்து அன்னக்குழி மண்டப பள்ளியில் தலைமை ஆசிரியர் பணி.
இவரது தலைமை ஆசிரியர் பண்பினையும் கற்றுத்தரும் மாண்பினையும் மாணவர்களின் மீது செலுத்தும் அன்பையும் அக்கறையையும் பார்த்த டிவிஎஸ் நிறுவனம் தாங்கள் ஆரம்பிக்க உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமித்தது.
பள்ளியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் தான் வேறு பள்ளி வேறு என்று நினைக்காமல் கடுமையாக உழைத்ததை அடுத்து மளமளவென்று பள்ளியின் புகழும் பெருமையும் வளர்ந்தது.இன்றைக்கு மதுரையின் பெருமைகளில் ஒன்றாக டிவிஎஸ் பள்ளி விளங்குகிறது.
இப்படி ஒரு வரியில் வளர்ந்தது,விளங்குகிறது என்று சொல்லிவிட்டேனே தவிர உண்மையில் இதற்காக தலைமை ஆசிரியராக இருந்து எஸ்.ராமஸ்வாமி உழைத்த உழைப்பை ஒரு தடிமனான புத்தகம் போட்டால் கூட அடக்கிவிட முடியாது.
எளிமையான அதே நேரம் கம்பீரமான தோற்றம்,இனிமையான பேச்சு எவ்வளவு கடினமான விஷயத்தையும் எளிதாக புரியவைக்கும் திறமை அபாரமான ஆங்கில அறிவு கணிதத்தில் நிகரில்லாத தன்மை எதிலும் ஆழமாக ஆய்ந்து அறியும் அறிவு அப்படி தோண்டியெடுத்த அறிவை எளிமையாக பகிரந்து கொள்ளும் அழகு இப்படிப்பட்ட அருங்குணங்கள் இவரிடம் பயிலும் மாணவர்களையும் பழகும் ஆசிரியர்களையும் ஈர்த்ததில் வியப்பில்லை.
செயலில் தேனீயாக,சுறுசுறுப்பில் எறும்பாக,நேர்மையில் துலாக்கோலாக,மாண்பில் மலையாக விளங்கிய இவர் அடிக்கடி சொல்வது ஆசிரியப்பணி என்பது கிடைத்தர்க்கரிய வரம் ஆகவே விடுமுறை எடுக்காமல் பணியாற்றுங்கள் உங்கள் ஒவ்வொரு சொல்லும் செயலும் மாணவர்கள் வாழ்க்கையை உயர்த்தும் என்பார்
இப்படி ஆசிரியர்களை விடுமுறை இல்லாமல் பணியாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்ட இவர் விடுமுறை நாளில் கூட பள்ளிக்கு வந்து வேலை பார்ப்பார் வேலை முடித்து வீட்டிற்கு போனாலும் பள்ளிக்கூட வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பார் இவர் பள்ளியில் பணியாற்றிய வரை இவரது அறைக்கதவு மூடியிருந்தது இல்லை எந்நேரமும் வாசலையும் இதயத்தையும் விசாலமாக திறந்துவைத்திருந்தார்.
கணக்கு வராது ஆங்கிலம் பிடிக்காது என்று பல ஆண்டுகளாக அடம்பிடித்த மாணவர்கள் பலர் இவரிடம் படித்த பிறகு இதுதான் கணக்கா? இவ்வளவுதான் ஆங்கிலமா? என்று அந்தப்பாடங்களில் ஜொலித்தனர்.
பாடத்திட்டங்கள்,மாணவர்கள் பெயர் பதிவு,ஆசிரியர் வகுப்பு திட்டம்,அலுவலக மேலாண்மை,நுாலக பொறுப்பு என்று பல்வேறு பொறுப்புகளையும் தானே கைப்பட எழுதி பலரும் பாராட்டும்படியாக கோப்புகளை கையாண்டார்.
பள்ளியாகட்டும் வீடாகாட்டும் தனக்கான வேலைகளை தானேதான் செய்து கொள்வார் ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு ரோல்மாடலாக இருந்தார்.
இவரது பணியைப் பாராட்டி தமிழக அரசு ‛தலைசிறந்த ஆசிரியர்களில் ஒருவர்' என 70 களில் விருது வழங்கி கவுரவித்தது,மத்திய அரசு 78 ம் வருடம் ‛இணையில்லாத தலைமையாசிரியர்' விருது வழங்கியது.
இது போக சாரணர் அமைப்பு ,பாரதி பேரவை உள்ளீட்ட பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருது வழங்கி மகிழ்ந்தன.
அரசின் பல்வேறு கல்விக்குழுக்களில் பங்களிப்பு செய்தார்,கல்விக்கான சிறப்பு திட்டங்களில் தலைவராக இருந்து வழிநடத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி.,உள்ளீட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் பிரமுகர்கள் பள்ளியின் விருந்தினர்களாக வந்து சென்றுள்ளனர் அவர்கள் போகும் போது எழுதிய பள்ளிக்குறிப்புகளில் தலைமை ஆசிரியர் எஸ்.ராமஸ்வாமியின் பெயரும் செயலும் தனித்து இடம் பெற்றிருக்கிறது,அவர் ஒய்வு பெற்ற பின் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் 81 வயதில் இயற்கை எய்தினார்.
இவரிடம் பாடம் பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் உலகின் பல்வேறு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர் நமது நாட்டிலேயே தலை சிறந்த மருத்துவர்களாக,பொறியாளர்களாக,விஞ்ஞானிகளாக.,உயரதிகாரிகளாக விளங்குகின்றனர்.
அந்த மாணவர்கள் அனைவரும் அவர் இருக்கும் போதே அவரது பெயரால் பல்வேறு சமூகத்திற்கு தேவையான வேலைகளை செய்து வந்தனர் இறந்த பிறகு இன்னும் வேகமாக அவரது பெயருக்கு புகழ் சேர்த்து வருகின்றனர்.
அதன் உச்சமாக வரவிருக்கும் பத்தாம் தேதி துவங்கி தொடர்ந்து அவரது நுாற்றாண்டை வெகு விமரிசையாக கொண்டாட இருக்கின்றனர்.
இவரைப்பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட அவரது முன்னாள் மாணவர் சமுதாயத்திற்கு மிகவும் நன்றி!
-எல்.முருகராஜ்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
09-ஆக-202106:45:35 IST Report Abuse
RaajaRaja Cholan நல்லவராக இருக்கலாம் , சிறந்த ஆசிரியராக இருக்கலாம் , அரசு பனி அரசு பள்ளிகளில் உள்ள அடித்தட்டு மாணவர்களை உயர்த்தியிருந்தால் மேலும் சிறப்பு , டீ வி ஸ் ஒரு பெரும்பாலும் பெருங்குடிகள் படிக்கும் பள்ளி , அதனால் பெரும் வியப்பு ஒன்றும் இவர் செய்யலால் வரவில்லை
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
05-ஆக-202121:21:16 IST Report Abuse
sankaseshan இவரை போன்ற திறமையானவர்கள் இருந்தார்கள் . இப்பொழுது உள்ள அரசு ஆசிரியர்களை நினைவில் கொள்ளுங்கள் ,மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X