பொது செய்தி

தமிழ்நாடு

கீரம்பூர் சுங்கச்சாவடியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஆக 05, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கீரம்பூரில், மாவட்ட வருவாய் துறை, இந்திய மருத்துவம் ஓமியோபதி துறையின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் அடுத்த கீரம்பூரில் செயல்படும் சுங்கச்சாவடியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., கோட்டைக்குமார் தலைமை வகித்தார். இதில்,

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கீரம்பூரில், மாவட்ட வருவாய் துறை, இந்திய மருத்துவம் ஓமியோபதி துறையின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் அடுத்த கீரம்பூரில் செயல்படும் சுங்கச்சாவடியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., கோட்டைக்குமார் தலைமை வகித்தார். இதில், சுங்கச்சாவடி வழியே செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர கனரக வாகன ஓட்டுனர்கள், உதவியாளர்கள், நடத்துனர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம், கபசுர குடிநீர், சூரண மாத்திரை, முக கவசம் வழங்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சித்த மருத்துவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X