பொது செய்தி

தமிழ்நாடு

காவல் கண்காணிப்பு, குற்றத்தடுப்பு: இரு சக்கர வாகன சேவை துவக்கம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
நாமக்கல்: மாவட்ட காவல்துறை சார்பில், காவல் கண்காணிப்பு, குற்றத்தடுப்பு, இரு சக்கர வாகன சேவை, நாமக்கல்லில் நேற்று துவங்கியது. கூடுதல் எஸ்.பி., சேகர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நாமக்கல் பூங்கா சாலையில் துவங்கிய சேவை, மணிக்கூண்டு, பரமத்தி சாலை, கோட்டை சாலை, பிரதான சாலை, பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று, துவங்கிய இடத்தில் முடிந்தது. இந்த ரோந்து வாகன சேவை, நாமக்கல், சேந்தமங்கலம்,

நாமக்கல்: மாவட்ட காவல்துறை சார்பில், காவல் கண்காணிப்பு, குற்றத்தடுப்பு, இரு சக்கர வாகன சேவை, நாமக்கல்லில் நேற்று துவங்கியது. கூடுதல் எஸ்.பி., சேகர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நாமக்கல் பூங்கா சாலையில் துவங்கிய சேவை, மணிக்கூண்டு, பரமத்தி சாலை, கோட்டை சாலை, பிரதான சாலை, பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று, துவங்கிய இடத்தில் முடிந்தது. இந்த ரோந்து வாகன சேவை, நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, நல்லிபாளையம், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில், ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு, இருசக்கர வாகனங்களில், நகரப் பகுதிகளில் ரோந்து செல்வர். அதில், மொத்தம், 36 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு வாகனத்திற்கு, இரண்டு பேர் வீதம், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல் கண்காணிப்பு, குற்றத்தடுப்பு ரோந்து செல்வர். அதன் மூலம், நகரப்பகுதியில், சந்தேகத்திற்கிடமான நடமாட்டம், குற்றத்தடுப்பு, வாகனங்கள் நிறுத்தம், போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறிதல், பொது இடங்களில் தேவைப்படுவோருக்கு காவல் உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும், இந்த ரோந்து வாகனத்தில் செல்வோர் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. டி.எஸ்.பி., சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் குமார், பாண்டியன், உமா பிரியதர்ஷினி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X