சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பிக்கு அரிவாள்மனை வெட்டு: சகோதரி கைது

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மோகனூர்: மோகனூரை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு, 80. அவருக்கு, இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். சமையல் வேலை செய்து வரும் மகன் முருகேசனுக்கும், 40, அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதில், முருகேசன், தன் தாயாருடன், 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில், முருகேசன், வாழப்பாடியில் வசித்து வரும் தன் சகோதரி காஞ்சனாவுக்கு, 50, ஐம்பதாயிரம் ரூபாய்

மோகனூர்: மோகனூரை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு, 80. அவருக்கு, இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். சமையல் வேலை செய்து வரும் மகன் முருகேசனுக்கும், 40, அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதில், முருகேசன், தன் தாயாருடன், 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில், முருகேசன், வாழப்பாடியில் வசித்து வரும் தன் சகோதரி காஞ்சனாவுக்கு, 50, ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதற்கிடையில், அந்த பணத்துக்கு வட்டியும், அசலும் செலுத்தவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, இது குறித்து காஞ்சனாவிடம் கேட்டுள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. ஆத்திரமடைந்த காஞ்சனா அங்கிருந்து அரிவாள்மனையை எடுத்து, முருகேசனை வெட்டியுள்ளார். அதில், படுகாயமடைந்த முருகேசன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மோகனூர் போலீசார் வழக்கு பதிந்து, காஞ்சனாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X