சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடும் லாரியில் டிரைவர் உயிரிழப்பு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
எலச்சிபாளையம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, நாவலூரை சேர்ந்தவர் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் சரவணன், 42. இவர் நேற்று, கள்ளக்குறிச்சியில் இருந்து பள்ளிபாளையம் காகித ஆலைக்கு, விறகுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். எலச்சிபாளையம் அருகே, நல்லாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நீண்ட நேரமாக சாலையோரத்தில் லாரி நிற்பதைக் கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் லாரியை

எலச்சிபாளையம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, நாவலூரை சேர்ந்தவர் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் சரவணன், 42. இவர் நேற்று, கள்ளக்குறிச்சியில் இருந்து பள்ளிபாளையம் காகித ஆலைக்கு, விறகுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். எலச்சிபாளையம் அருகே, நல்லாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நீண்ட நேரமாக சாலையோரத்தில் லாரி நிற்பதைக் கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் லாரியை பார்வையிட்டனர். சரவணன் மயங்கிய நிலையில் இருந்தது தெரிந்தது. '108' அவசர ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் வந்து, பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மாரடைப்பு கராணமாக இறந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X