தேச விரோதி போல் செயல்படுவதா? எதிர்க்கட்சியினர் மீது மோடி புகார்!

Updated : ஆக 07, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி:நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கத் துடிக்கும் தேச விரோதிகள் போல எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக, பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழைகள் நலன் மற்றும் இலவச உணவுப் பொருட்கள் திட்ட நாள் கடைப்பிடிக்கப் பட்டது.'வீடியோ கான்பரன்ஸ்'இதில் பிரதமர் மோடி 'வீடியோ
தேச விரோதி ,எதிர்க்கட்சியினர் , மோடி புகார்!

புதுடில்லி:நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கத் துடிக்கும் தேச விரோதிகள் போல எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக, பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழைகள் நலன் மற்றும் இலவச உணவுப் பொருட்கள் திட்ட நாள் கடைப்பிடிக்கப் பட்டது.


'வீடியோ கான்பரன்ஸ்'

இதில் பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்று, இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தார். இலவச உணவுப் பொருட்களால் பயன் பெறுவோரிடம் கலந்துரையாடினார். இதில் மோடி பேசியதாவது:

கடந்த ஆட்சிக் காலங்களில் ஏழைகளுக்குச் செல்ல வேண்டிய உணவுப் பொருட்கள், கொள்ளை அடிக்கப்பட்டன. தற்போது அந்த நிலை இல்லை. உ.பி.,யில் 80 ஆயிரம் ரேஷன் கடைகள் வாயிலாக 15 கோடி பேருக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதற்கு மத்திய அரசின் நலத் திட்டங்களின் வெற்றியே சாட்சி.


'செல்ப் கோல்'

இந்தியா பல்வேறு துறைகளில் வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்க, சிலர் அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகவே 'செல்ப் கோல்' போட முயற்சிக்கின்றனர்.பார்லி., நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கி வருகின்றனர். நாட்டின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என நினைக்கும் தேச விரோதிகளைப் போல எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர்.ஆனால் அவர்களால் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது. இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக செல்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
06-ஆக-202122:23:59 IST Report Abuse
K.n. Dhasarathan இவருக்கு தெரிந்த ஒரே வார்த்தை மாற்று கருத்து சொல்பவர் எல்லாம் தேச விரோதிகள் . பாவம் நம் மக்கள் .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-ஆக-202122:21:07 IST Report Abuse
sankaseshan ராஜவேலுவுக்கு கடைசிகாலம் பரிதாபமாக இருக்கும் கூசாம பொய்பேசறான் மானம் இல்லதா ஜென்மம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-ஆக-202122:17:28 IST Report Abuse
sankaseshan ஏன்டா செந்தில் ,திருட்டு சங்கி ? எதை யடா திருடிட்டாங்க திராணி இருந்தா சொல்லு கங்குராசுக்கு காவடி தூக்கும் பயலே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X