தேர்தலுக்கு அகிலேஷ் தயார் :சைக்கிள் யாத்திரை துவக்கம்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
லக்னோ : அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சைக்கிள் யாத்திரையை இன்று (ஆக.05) நடத்தினார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இதற்காக கட்சிகள் தற்போதே தயாராகி வருகின்றன. 'எந்த பெரிய கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டோம். சிறிய
தேர்தல், அகிலேஷ் தயார் சைக்கிள் யாத்திரை துவக்கம்


லக்னோ : அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சைக்கிள் யாத்திரையை இன்று (ஆக.05) நடத்தினார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இதற்காக கட்சிகள் தற்போதே தயாராகி வருகின்றன. 'எந்த பெரிய கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டோம். சிறிய கட்சிகளை வரவேற்கிறோம்' என சமாஜ்வாதி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.


latest tamil news



கட்சியின் மறைந்த மூத்த தலைவர் ஜானேஸ்வர் மிஸ்ராவின் பிறந்த நாளையொட்டி அனைத்து தாலுகாவிலும் சைக்கிள் யாத்திரை நடத்த சமாஜ்வாதி ஏற்பாடு செய்திருந்தது.விலைவாசி உயர்வு, விவசாய சட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து இந்த யாத்திரை நடந்தது.

கட்சியின் சின்னமாக சைக்கிள் உள்ளதால் அதை பிரபலப்படுத்தும் வகையில் இந்த யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.லக்னோவில் நடந்த யாத்திரையின் போது அகிலேஷ் யாதவ் கூறியதாவது:அடுத்த சட்டசபை தேர்தலில் 350 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறியிருந்தேன். ஆனால், பா.ஜ., அரசுக்கு எதிராக மக்களின் கோபம், மனநிலையை பார்க்கும்போது 400 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.சட்டசபை தேர்தலுக்காகவே, சைக்கிள் யாத்திரையை அகிலேஷ் யாதவ் நடத்தியுள்ளதாக மற்ற
கட்சிகள் விமர்சித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
06-ஆக-202112:29:20 IST Report Abuse
INDIAN Kumar இவ்வளவு நாள் ஓய்வு இனி பிஸி
Rate this:
Cancel
06-ஆக-202108:55:23 IST Report Abuse
அருணா Puncture தான்
Rate this:
Cancel
06-ஆக-202108:55:01 IST Report Abuse
அருணா Puncture தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X