பொது செய்தி

தமிழ்நாடு

வெங்ககல்பட்டியில் அடிக்கடி விபத்து: நடவடிக்கை கோரி பொதுமக்கள் மறியல்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க, நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கரூர்-வெள்ளியணை சாலை வெங்ககல்பட்டியில், திருச்சி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வாகனங்கள், பாலத்தின் அணுகு சாலையில் சென்று, பாலம் மேல் பகுதி வழியாக வெள்ளியணை, பாளையம்,

கரூர்: கரூர் அருகே அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க, நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கரூர்-வெள்ளியணை சாலை வெங்ககல்பட்டியில், திருச்சி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வாகனங்கள், பாலத்தின் அணுகு சாலையில் சென்று, பாலம் மேல் பகுதி வழியாக வெள்ளியணை, பாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றன. டூவீலர்களில் செல்கிறவர்களும் அதே வழியை பின்பற்றி செல்கின்றனர். இதனால், வெங்ககல்பட்டியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதில், பலர் காயமடைந்தும் ஒரு சிலர் உயிரிழந்தும் உள்ளனர். நேற்று காலை பாலம் அருகில் இரு டூவீலர்கள் மோதிக்கொண்டதில், இரண்டு பேர் காயமடைந்தனர். அதையறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பாலம் கட்டப்பட்டுள்ள பகுதியில் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். வெங்ககல்பட்டியில் விபத்துகளை தடுக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, தான்தோன்றிமலை போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X