பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் விழா ரத்து; பக்தர்கள் வருகை குறைவு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவில் விழா ரத்து காரணமாக, பக்தர்களின்றி கோவில் வளாகம் வெறிச்சோடியது. கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக விழா ரத்து

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவில் விழா ரத்து காரணமாக, பக்தர்களின்றி கோவில் வளாகம் வெறிச்சோடியது. கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக விழா ரத்து செய்யப்பட்டது. இந்தாண்டும் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. நேற்று காலை அம்மனுக்கு மட்டும் பூஜை நடந்தது. கோவில் வளாகத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் சிலர் கோவில் வாசலில் நின்று வழிபட்டனர். கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X