சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே தனியார் சிமென்ட் ஆலை மேலாளர் தந்தை வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றனர். கரூர் தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 73; இவர் தற்போது, திருச்சியில் உள்ள மகன் ராமநாதன் வீட்டில் வசிக்கிறார். கடந்த, 2ல் தெற்கு காந்தி கிராமத்தில் உள்ள வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ராமநாதனுக்கு தகவல்

கரூர்: கரூர் அருகே தனியார் சிமென்ட் ஆலை மேலாளர் தந்தை வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றனர். கரூர் தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 73; இவர் தற்போது, திருச்சியில் உள்ள மகன் ராமநாதன் வீட்டில் வசிக்கிறார். கடந்த, 2ல் தெற்கு காந்தி கிராமத்தில் உள்ள வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ராமநாதனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வீட்டுக்கு சென்று ராமநாதன் பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஏழரை பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இதுகுறித்து, போலீசில் அவர் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சி அருகே, கரிக்காலியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் ராமநாதன் மேலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X