முகாந்திரம் இல்லை| Dinamalar

முகாந்திரம் இல்லை

Added : ஆக 05, 2021
Share
முகாந்திரம் இல்லைபெகாசஸ் மென்பொருள் வாயிலாக சிலரது போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படும் புகாருக்கு எந்தவிதமான அடிப்படை முகாந்திரமும் இல்லை. இது தொடர்பாக பார்லிமென்டில் எந்த விதமான விவாதத்துக்கும் மத்திய அரசு தயாராக உள்ளது.ரவிசங்கர் பிரசாத்மூத்த தலைவர், பா.ஜ.,பயம் இல்லை!எதிர்க்கட்சிகளின் குரலை மத்திய அரசு நசுக்க முயற்சிக்கிறது. இதைப் பார்த்து காங்கிரஸ்
 முகாந்திரம் இல்லை

முகாந்திரம் இல்லை
பெகாசஸ் மென்பொருள் வாயிலாக சிலரது போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படும் புகாருக்கு எந்தவிதமான அடிப்படை முகாந்திரமும் இல்லை. இது தொடர்பாக பார்லிமென்டில் எந்த விதமான விவாதத்துக்கும் மத்திய அரசு தயாராக உள்ளது.

ரவிசங்கர் பிரசாத்

மூத்த தலைவர், பா.ஜ.,

பயம் இல்லை!

எதிர்க்கட்சிகளின் குரலை மத்திய அரசு நசுக்க முயற்சிக்கிறது. இதைப் பார்த்து காங்கிரஸ் பயந்து விடாது. போன் ஒட்டு கேட்பு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளை பார்லிமென்டில் காங்கிரஸ் தொடர்ந்து எழுப்பும்.
மல்லிகார்ஜுன கார்கே
ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்

நிலைமை மோசமாகும்!

மேற்கு வங்கத்தில், தகுதியுள்ள அனைவருக்கும் செலுத்துவதற்கு 14 கோடி 'டோஸ்' தடுப்பூசி தேவை. ஆனால் குறைந்த அளவு தடுப்பூசிகளையே மத்திய அரசு வழங்கி வருகிறது. இதை அதிகரிக்காவிட்டால் மேற்கு வங்கத்தில் கொரோனாவின் நிலைமை மோசமாகி விடும்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X