பதவி விலகினார் பிரசாந்த் கிஷோர்

Added : ஆக 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சண்டிகர்:பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது.முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக கடந்த மார்ச்சில் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். அவருக்கு கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து அளிக்கப்பட்டது.அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் அமரீந்தர் சிங்குக்காக

சண்டிகர்:பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது.முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக கடந்த மார்ச்சில் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். அவருக்கு கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து அளிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் அமரீந்தர் சிங்குக்காக பிரசாந்த் கிஷோர் குழுவினர் பணியாற்றுவர் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் தன் முதன்மை ஆலோசகர் பதவியை பிரசாந்த் கிஷோர் ராஜினாமா செய்தார். முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பொது வாழ்க்கையில் இருந்து தற்காலிக இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ள காரணத்தால் முதன்மை ஆலோசகராக தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டி உள்ளதால், முதன்மை ஆலோசகர் பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-202111:55:09 IST Report Abuse
vpurushothaman வேறு எங்கிருந்தாவது "கணமான " ஆஃபர் " வந்திருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X