அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவை போற்றுவோம் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : ஆக 07, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை :'சட்டசபையில் படமாகத் தோன்றிய கருணாநிதி நினைவை, அவரவர் வீட்டில் போற்றுவோம்' என, தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.பொறுப்புஅவரது கடிதம்:இன்று ஒவ்வொரு தொண்டரின் இதயமும் தகர்ந்தது போன்ற உணர்வுடன் கண்ணீர் பெருக்கெடுத்த நாள்.வைர நெஞ்சம் உடைய கருணாநிதியை, இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த நாள். உடலால் கருணாநிதி
கருணாநிதி ,நினைவு, போற்றுவோம் ஸ்டாலின் கடிதம்

சென்னை :'சட்டசபையில் படமாகத் தோன்றிய கருணாநிதி நினைவை, அவரவர் வீட்டில் போற்றுவோம்' என, தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


பொறுப்புஅவரது கடிதம்:இன்று ஒவ்வொரு தொண்டரின் இதயமும் தகர்ந்தது போன்ற உணர்வுடன் கண்ணீர் பெருக்கெடுத்த நாள்.வைர நெஞ்சம் உடைய கருணாநிதியை, இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த நாள். உடலால் கருணாநிதி பிரிந்தாலும், தொண்டர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

இது, மூன்றாவது ஆண்டு நினைவு தினம். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், எல்லா நாளிலும், அதன் ஒவ்வொரு நொடியிலும் அவர் நினைவின்றி நம் கட்சியில்லை.ஆறாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் தி.மு.க., இந்தத் தேர்தல் களத்தில் தென்றலை தீண்டவில்லை; தீயைத் தாண்டி வந்திருக்கிறது. இன்னும் கடக்க வேண்டிய பொறுப்புகள் உண்டு.


மரியாதைகொரோனா கால நெறிமுறைகளை கருத்தில் கொண்டு, அவற்றை முறையாக கடைப்பிடித்து, இன்று அவரவர் இல்லத்தின் வாசலில் கருணாநிதி படத்தை வைத்து மாலையிட்டு, மலர் துாவி புகழ் வணக்கம் செலுத்த வேண்டும். பெருவிழாக்கள் வேண்டாம். அலங்கார ஒலி பெருக்கிகளை தவிர்த்திடுங்கள். நம் நெஞ்சங்களிலும், நினைவுகளிலும் நிரந்தரமாக இருந்து, நாட்டை வழி நடத்தும் கருணாநிதிக்கு, வீடுகள்தோறும் மரியாதை செலுத்திடுவோம்.அவர் பாதையில் பயணித்து தமிழகத்தை மாண்புறச் செய்திடுவோம்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Narayanan - Chennai,இந்தியா
06-ஆக-202122:05:52 IST Report Abuse
Sankar Narayanan பலதார திருமணம் நிறைய நடக்கும்.பொதுமக்களை ஏமாற்றி தன்மக்களை பணக்காரராக்குவதில் பலர் ஈடுபடுவார்கள்.நினைவுள்ளவரை பணம் சேர்பதிலேயே குறியாக அலைபவர்கள் நிறைய சேர்ப்பார்கள்.தமிழ்த்தாய் சொல்லொணா துயரம் பெறுவாள்.அர்த்தமில்லாத அடுக்குமொழி தமிழனை தலைகுனிய வைக்கும்.ஐயோ பாவம் அறிவாளிகள்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
06-ஆக-202121:54:37 IST Report Abuse
madhavan rajan போற்றும்போது நூத்தியெட்டு போற்றி கூறவும். காவிரியை தமிழகத்துக்கு வராமல் செய்த தலைவருக்கு போற்றி. கர்நாடகா எவ்வளவு அணைகள் வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம் என்று சட்டசபையில் கூறிய தலைவா போற்றி. ஒப்பந்தத்தை காலத்தில் புதுப்பிக்காத தலைவனே போற்றி, விஞ்ஞான ஊழல் நாயகா போற்றி. பல்டி அடித்து மத்திய அரசு காலில் விழுந்தாய் போற்றி. இலங்கைத் தமிழர்கள் அழிவதை கண்டுகொள்ளாத கருணாமூர்த்தியே போற்றி, கச்சத்தீவை தாரைவார்க்க துணை நின்றவனே போற்றி, மர்மமாக மஞ்சள் துண்டு அணிந்தாய் போற்றி, போலி இந்துமதம் எதிர்த்தாய் போற்றி, பிரமதங்களை வெளிப்படையாக ஆதரித்தோய் போற்றி, கட்சியை குடும்பச்ச்சொத்தாக்கியோய் போற்றி, உறவினர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுத்தந்தாய் போற்றி, 2G யாழ் பலனடைந்தோய் போற்றி, போலி தமிழ் ஆதரவாளன் போற்றி, இதுபோல பல போற்றிகளை கூறி வீட்டிலேயே வழிபடவும். அப்போதுதான் அதேபோல அவர் மகனும், பேரனும் உங்கள் தலையில் மிளகாய் அரைக்க வசதியாக இருக்கும். அவர்கள் படங்களும் சட்டசபையில் வைக்கப்படும்.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
06-ஆக-202121:48:51 IST Report Abuse
Siva யாராவது ஒருவர் ஆறுதல் சொல்லுங்கப்பா.... தமிழனும் தமிழ் நாடும் நாசமாக போகும். தமிழ் நாட்டை காப்பாற்ற இன்னொரு மலையாளி கன்னடியன் தெலுங்கன் வருவானா அல்லது மூளை கம்மி என்று சொல்ல பட்ட பீகாரி வருவானா... ஒன்று மட்டும் நிச்சயம். சிவன் சொத்து குல நாசம்....... அது மாறாதது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X