பொது செய்தி

தமிழ்நாடு

யானைகளின் வாழ்விடமாக மாறிய விஸ்கோஸ் ஆலை வளாகம்!

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;விஸ்கோஸ் ஆலை வளாகம், முள் காடாக மாறியதால், யானைகளின் வாழ்விடமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.சிறுமுகை நகர் பகுதி அருகே விஸ்கோஸ் ஆலை இயங்கியது. பல்வேறு காரணங்களால், 20 ஆண்டுகளுக்கு முன், விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டது. ஆலையில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு எடுத்துச் சென்றனர். ஆலை வளாகம் காளியான பகுதியாக மாறியதால், முள்

மேட்டுப்பாளையம்;விஸ்கோஸ் ஆலை வளாகம், முள் காடாக மாறியதால், யானைகளின் வாழ்விடமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.சிறுமுகை நகர் பகுதி அருகே விஸ்கோஸ் ஆலை இயங்கியது. பல்வேறு காரணங்களால், 20 ஆண்டுகளுக்கு முன், விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டது. ஆலையில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு எடுத்துச் சென்றனர். ஆலை வளாகம் காளியான பகுதியாக மாறியதால், முள் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன.சிறுமுகையை அடுத்த அம்மன்புதுார், மூளையூர் ஆகிய வனப்பகுதியில் உள்ள யானைகள், பவானி ஆற்று நீரை கடந்து, விஸ்கோஸ் ஆலை வளாகத்தில் உள்ள முள் காட்டு பகுதிக்கு வருகின்றன. இங்கிருந்து சுற்றுப்பகுதியில் உள்ள, வாழை தோட்டங்களில் நுழைந்து, வாழைகளை சேதப்படுத்துகின்றன.இதுகுறித்து, சிறுமுகை விவசாயி தம்பு கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:சிறுமுகையில், 750 ஏக்கர் நிலப்பரப்பில் விஸ்கோஸ் ஆலை வளாகம் உள்ளது. இதில் பவானி ஆற்றின் ஓரத்தில், அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம், ஆலை வளாகத்தில் உள்ளது. ஆலையில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் அகற்றிய நிலையில், 20 ஆண்டுகளாக முள் மரங்கள் வளர்ந்து, வனப்பகுதி போன்று மாறியது. இதனால் யானைகள் வனப்பகுதியிலிருந்து விஸ்கோஸ் ஆலை முள் காட்டுப்பகுதிக்கு வந்து தங்கி விடுகின்றன. இங்கிருந்து சிறுமுகை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் பயிர் செய்துள்ள வாழை, சோளம், கம்பு ஆகிய பயிர்களை சேதப்படுத்துகின்றன. கடந்த வாரம் தண்டபாணி என்பவர் தோட்டத்தில் நுழைந்து கம்பு பயிர்கள், மசால் புல்லை யானைகள் உண்டு சேதப்படுத்தின. அதேபோன்று அண்ணாநகரில் பொதுமக்கள் வீடுகளில் வளர்க்கும் வாழை மரங்களை, யானைகள் இரவில் வந்து முற்றிலும் சேதம் செய்கின்றன.பாரதி நகரில் உள்ள வாழைத்தோட்டம், விஸ்கோஸ் ஆலையின் பின்புறம் உள்ள வாழைத் தோட்டங்களுக்கு, யானைகள் தொடர்ச்சியாக வந்து சேதம் செய்து வருகின்றன. யானைகளை விஸ்கோஸ் ஆலையிலிருந்து விரட்டும் படி, மூன்று முறை பொது மக்கள், விவசாயிகள் ஆகியோர் மறியல் போராட்டம் நடத்தினோம். ஆனால், சிறுமுகை வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், விஸ்கோஸ் ஆலை வளாகத்தில் உள்ள முள் மரங்கள் அனைத்தையும் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், யானைகள் இங்கு வருவது தவிர்க்கப்படும். மேலும் இரவு நேரங்களில் ஆலையின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே சிறுமுகை வனத்துறையினர் விஸ்கோஸ் ஆலை வளாகத்தில் உள்ள யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X