இந்தியா

சிறப்பு அந்தஸ்து ரத்தின் 2ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் கடை அடைப்பு

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஸ்ரீநகர் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு தினமான நேற்று, ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஜம்மு - காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
சிறப்பு அந்தஸ்து ரத்து, 2ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் கடை அடைப்பு

ஸ்ரீநகர் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு தினமான நேற்று, ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஜம்மு - காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.ஸ்ரீநகரின் முக்கிய கடை வீதியான லால் சவுக் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக், புட்காம், கந்தர்பால், குப்வாரா மாவட்டங்களில் பரவலாக கடைகள் திறந்திருந்தன.


latest tamil news


பெரும்பாலான பகுதி

களின் சாலையில் போக்குவரத்து இன்றி காணப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் முழுதும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நேற்று அமைதியாக காணப்பட்டது.குப்கர் கமிட்டியின் உறுப்பினர்கள், அதன் தலைவரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை அவரது வீட்டில் நேற்று சந்தித்து பேசினர்.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி கூறியதாவது:இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கறுப்பு தினத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு இழைக்கப்பட்ட அநீதி, வலி மற்றும் வேதனையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அரசியல் மற்றும் உளவியல் ரீதியாக மக்கள் பெரும் பின்னடைவை சந்தித்த நாள்.
இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ''ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட இந்த நாள், வரலாற்றில் என்றைக்கும் நினைவு கூரப்படும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
06-ஆக-202113:21:30 IST Report Abuse
தத்வமசி அவனுங்கள உள்ள போட்டு மீண்டும் லாடம் கட்டவும். அவனுங்க வெளியில வந்து காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் எந்த லாபமும் இல்லை. உள்ளேயே இருக்கட்டும்.
Rate this:
Cancel
பாலா - chennai,இந்தியா
06-ஆக-202112:56:16 IST Report Abuse
பாலா இவனுக என்னதான் கூப்பாடு போட்டாலும் ஒரு கல்லை கூட நகத்த முடியாது அது தான் நிதர்சனமான உண்மை இது எதிர்கட்சிகள் நல்லா புரிஞ்சுகிட்டாங்க ஏன்ன மேல இருக்கறது ஒரு எஃகு மனுசன் இந்த மாதிரி நிறைய பார்த்து பழகிட்டவர் முன்னாடி ஊடகங்கள்?? அப்படிங்கற பேருல இவனுக சின்ன விஷயத்த கூட பேருசா காட்டி பரபரப்பை உண்டாக்கிட்டு இருந்தானுங்க இப்போ பல கம்பேனி திவாலாகற நிலமையில இருக்கறதா கேள்வி
Rate this:
E. RAJAVELU - Chennai,இந்தியா
06-ஆக-202118:21:14 IST Report Abuse
E. RAJAVELUமாற்றம் ஒன்றே மாறாதது, அவர்களுக்கு சாதகமான ஆட்சி வரும்போது சிறப்பு அந்தஸ்து தானே வரும்....
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
06-ஆக-202108:33:11 IST Report Abuse
E. RAJAVELU மானமுள்ள மக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X