சிறப்பு அந்தஸ்து ரத்தின் 2ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் கடை அடைப்பு| Dinamalar

இந்தியா

சிறப்பு அந்தஸ்து ரத்தின் 2ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் கடை அடைப்பு

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (6)
Share
ஸ்ரீநகர் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு தினமான நேற்று, ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஜம்மு - காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
சிறப்பு அந்தஸ்து ரத்து, 2ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் கடை அடைப்பு

ஸ்ரீநகர் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு தினமான நேற்று, ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஜம்மு - காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.ஸ்ரீநகரின் முக்கிய கடை வீதியான லால் சவுக் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக், புட்காம், கந்தர்பால், குப்வாரா மாவட்டங்களில் பரவலாக கடைகள் திறந்திருந்தன.


latest tamil news


பெரும்பாலான பகுதி

களின் சாலையில் போக்குவரத்து இன்றி காணப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் முழுதும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நேற்று அமைதியாக காணப்பட்டது.குப்கர் கமிட்டியின் உறுப்பினர்கள், அதன் தலைவரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை அவரது வீட்டில் நேற்று சந்தித்து பேசினர்.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி கூறியதாவது:இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கறுப்பு தினத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு இழைக்கப்பட்ட அநீதி, வலி மற்றும் வேதனையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அரசியல் மற்றும் உளவியல் ரீதியாக மக்கள் பெரும் பின்னடைவை சந்தித்த நாள்.
இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ''ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட இந்த நாள், வரலாற்றில் என்றைக்கும் நினைவு கூரப்படும்,'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X