இந்தியா

போன் ஒட்டு கேட்பு விவகாரம் : சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி :போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது. இது குறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதா, போதிய ஆதாரங்கள் உள்ளனவா' என, மனுதாரர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக, நம் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள்,
போன் ஒட்டு கேட்பு , சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

புதுடில்லி :போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது. இது குறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதா, போதிய ஆதாரங்கள் உள்ளனவா' என, மனுதாரர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக, நம் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களின் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது.


மீறிய செயல்latest tamil newsஇது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உட்பட ஒன்பது மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள், தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உள்ளிட்டோர் வாதாடினர். அவர்கள் கூறியதாவது:நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலரது போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இது தனிமனித சுதந்திரத்தை மீறிய செயல்.இந்த விவகாரம் வெளிவந்தவுடன், இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாடுகளுக்கு அல்லது அரசு குறிப்பிடும் அமைப்புகளுக்கு மட்டுமே இந்த மென்பொருள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. தன் குடிமக்களை உளவு பார்க்க மத்திய அரசு இந்த மென்பொருளை வாங்கியுள்ளதா என்ற உண்மை மக்களுக்கு தெரிய வேண்டும். இதற்காக சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.


சந்தேகம்இது குறித்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டதாவது: போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக பத்திரிகைகளில் வந்த செய்தி உண்மையாக இருந்தால், அது மிகவும் தீவிரமான பிரச்னைதான். ஆனால் இந்த வழக்கில் மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப முடியாது.
வழக்கின் விபரங்களை மத்திய அரசுக்கு மனுதாரர்கள் அனுப்பி வைக்கலாம். வரும் 10ம் தேதி மீண்டும் விசாரணை நடக்கும். மத்திய அரசின் சார்பில் யாராவது ஆஜரானால் அப்போது, 'நோட்டீஸ்' வழங்க முடியும்.இந்த விவகாரத்தில் பல சந்தேகங்கள், கேள்விகள் எழுகின்றன. கடந்த 2019ல் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது திடீரென பிரச்னை பெரிதானது ஏன்.தங்கள் போன் ஒட்டு கேட்கப்பட்டதாக சிலர் கூறியுள்ளனர். ஒட்டு கேட்கப்பட்டதாக சந்தேகம் இருந்தால், 'டெலிகிராப்' சட்டம் அல்லது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி புகார் கொடுத்திருக்கலாம். ஆனால் யாரும் புகார் கொடுத்ததாக தெரியவில்லை.


ஆதாரமில்லைஇந்த வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய தனிநபர்களின் பெயர்களை வாதிகளாக எப்படி சேர்க்க முடியும். அது திருத்தப்பட வேண்டுமென,பல மூத்த பத்திரிகையாளர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.அவர்கள் மெத்த படித்த, அறிவு ஞானம் உடையவர்கள். ஆனால் இந்த விவகாரத்தில் பல முக்கிய ஆதாரங்களை தொகுத்து ஏன் அளிக்கவில்லை.ஆதாரங்களே இல்லை என நாங்கள் கூறவில்லை; ஆனால் போதிய அளவில் இல்லை. அதேபோல் இந்த ஆதாரங்கள் அனைத்தும் ஏற்கக் கூடியதா என்பதும் தெரியவில்லை.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
06-ஆக-202115:52:04 IST Report Abuse
Vena Suna காங்கிரஸ் வேலை தான் இது...இந்திரா காந்தி emergency காலத்தில் செய்தது...
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
06-ஆக-202114:04:07 IST Report Abuse
Suppan "2019ல் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது திடீரென பிரச்னை பெரிதானது ஏன்.தங்கள் போன் ஒட்டு கேட்கப்பட்டதாக சிலர் கூறியுள்ளனர். ஒட்டு கேட்கப்பட்டதாக சந்தேகம் இருந்தால், 'டெலிகிராப்' சட்டம் அல்லது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி புகார் கொடுத்திருக்கலாம். ஆனால் யாரும் புகார் கொடுத்ததாக தெரியவில்லை" அதெப்படி? பாராளுமன்றம் இப்பொழுதுதானே கூடியுள்ளது? ரகளை செய்ய இதுதானே சந்தர்ப்பம்
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
06-ஆக-202110:48:41 IST Report Abuse
Ramalingam Shanmugam கம்மிகளின் சீனாவுடனான தேச துரோக செயல்களை விசாரணை செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X