தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் ஆலோசனை

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துதல், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத் துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் ஜூன் மாதத்தில் இருந்து, கொரோனா தொற்று தாக்கம் குறையத் துவங்கியது. ஆனால், சில நாட்களாக மீண்டும் சற்று உயரத் துவங்கி உள்ளது. இந்நிலையில், கூடுதல் தளர்வுகளின்றி நடைமுறையில் இருந்த ஊரடங்கு, 9ம் தேதி காலை 6:00 மணி வரை
கொரோனா பரவல், அதிகரிப்பு, முதல்வர், ஆலோசனை

சென்னை : கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துதல், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத் துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் ஜூன் மாதத்தில் இருந்து, கொரோனா தொற்று தாக்கம் குறையத் துவங்கியது. ஆனால், சில நாட்களாக மீண்டும் சற்று உயரத் துவங்கி உள்ளது. இந்நிலையில், கூடுதல் தளர்வுகளின்றி நடைமுறையில் இருந்த ஊரடங்கு, 9ம் தேதி காலை 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து நோய் பரவல் அதிகரித்தபடியால், ஆங்காங்கே சில கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றன. திடீர் திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும், குறிப்பிட்ட பகுதியில் கட்டுப்பாடு, மற்ற பகுதிகளில் கட்டுப்பாடு இல்லாதது போன்றவை, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.


latest tamil news




நோய் பரவல் வேகம் அதிகரிக்கும் முன், அதை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்வதற்காக, தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வர் தலைமையில் இன்று காலை 11:30 மணிக்கு நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், சுகாதாரத் துறையினர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
06-ஆக-202109:40:19 IST Report Abuse
Unmai Vilambi போன வருடம் மருந்தோ தடுப்பூசியோ இல்லாத பொழுது ஊரதடங்கு போடப்போ ஊளை இட்டார்கள் இப்போ மே மாதம் முதல் ஊரடங்கு தான் இன்னும் ஐந்து வருடம் இப்படியே போய்டும் ஒன்று புரிய வில்லை: BAKRID கு குறைந்த CORONA பிள்ளையார் சதுர்த்தி கு எப்படி எகிறுகிறது?
Rate this:
Cancel
06-ஆக-202109:33:51 IST Report Abuse
ஸாயிப்ரியா சில பண்டிகைகளுக்கு மட்டும் ஆலோசனை கட்டுப் பாடுகள் தொடரும்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-ஆக-202109:23:56 IST Report Abuse
duruvasar இந்த விடியல் மாதாந்திர அறிவிப்பாக இல்லாமல் , ஆட்சிக்காலம் முழுமைக்கும் அமல் படுத்த அயாராது உழைப்போம் என ஒற்றை வரியில் கூறிவிடுங்கள் முதல்வரே. விடியலில் கண்கூசும் அளவிற்க்கு ஒளி இருப்பதால் அனைத்து மக்களுக்கும் இலவசமாக குளிரூட்டு கண்ணாடி அளிக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்பாய் இருக்கிறது. எடுத்து சொல்லுங்க அப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X