இது உங்கள் இடம்: கே.என்.நேருவுக்கு நோபல் பரிசு!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: கே.என்.நேருவுக்கு 'நோபல்' பரிசு!

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (75)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எஸ்.மணி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:நம் முன்னோர் நவீன ஆராய்ச்சி கூடங்களோ, கணினியோ, உபகரணங்களோ இன்றி, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர். பூமியிலிருந்து சூரியன் எவ்வளவு துாரத்தில் உள்ளது; ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரம், கிரகணம் எப்போது துவங்கும்
Nehru, DMK, Nobel Prize,KN Nehru


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


எஸ்.மணி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
நம் முன்னோர் நவீன ஆராய்ச்சி கூடங்களோ, கணினியோ, உபகரணங்களோ இன்றி, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர். பூமியிலிருந்து சூரியன் எவ்வளவு துாரத்தில் உள்ளது; ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரம், கிரகணம் எப்போது துவங்கும் உட்பட எண்ணற்ற விஷயங்களை துல்லியமாக கணக்கிட்டனர்.

சில நுாறு ஆண்டுகளுக்கு முன் தான், மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நவீன கருவிகளின் உதவியுடன் அந்த விபரங்களை கண்டறிந்தனர். அவையும், நம் முன்னோர் கண்டுபிடித்ததும் துல்லியமாக பொருந்திப் போவதைக் கண்டு, அவர்கள் பிரமித்து கொண்டிருக்கின்றனர். நம் மூதாதையரின் கண்டுபிடிப்புகளை விஞ்சி விட்டார், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு!


latest tamil news


வளர்ச்சியடைந்த ஒரு மனிதனின் மூளை, 1.5 கிலோ இருக்கும். வெகு சிலருக்கு கொஞ்சம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும். அமைச்சர் நேரு எந்தவித உபகரணத்தின் உதவியுமின்றி, 'பீஹாரிகளுக்கு மூளை குறைவு' எனக் கண்டுபிடித்து, 'அசத்தியுள்ளார்! 'நம்மை விட மூளை அளவில் குறைவான பீஹாரிகளில் ஒருவரான பிரசாந்த் கிஷோரை தான், 380 கோடி ரூபாய் கொட்டி கொடுத்து, தேர்தல் ஆலோசகராக நியமித்தது, தி.மு.க., தலைமை. அவரின் வழிகாட்டுதலில் தான், தி.மு.க., இப்போது ஆட்சியை பிடித்துள்ளது.

மருத்துவம், அறிவியல், பொருளாதாரம், இலக்கியம் போன்றவற்றோடு அசத்தலான அரிய கண்டுபிடிப்புகளுக்கும் 'நோபல்' பரிசு வழங்கப்படும். இந்த 2021ம் ஆண்டுக்கான அசத்தலான அரிய கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசை, அமைச்சர் நேருவுக்கு வழங்க வேண்டும் என, தமிழக மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X