பொது செய்தி

இந்தியா

நீதிபதிகள் எண்ணிக்கை: ராஜ்யசபாவில் மத்திய அரசு தகவல்

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : நம் நாட்டில் 2020ம் ஆண்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 21.03 என்ற விகிதத்தில் இருந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ராஜ்யசபாவில் கேள்விக்கு பதில் அளிக்கையில் நேற்று கூறியதாவது:கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாட்டில் உள்ள 10 லட்சம் பேருக்கு எத்தனை நீதிபதிகள் உள்ளனர் என்ற
நீதிபதிகள், ராஜ்யசபா, மத்திய அரசு

புதுடில்லி : நம் நாட்டில் 2020ம் ஆண்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 21.03 என்ற விகிதத்தில் இருந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ராஜ்யசபாவில் கேள்விக்கு பதில் அளிக்கையில் நேற்று கூறியதாவது:கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாட்டில் உள்ள 10 லட்சம் பேருக்கு எத்தனை நீதிபதிகள் உள்ளனர் என்ற எண்ணிக்கை கணக்கிடப்பட்டன.


latest tamil news


உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. அதன்படி கடந்த 2018ல், 10 லட்சம் பேருக்கு 19.78 நீதிபதிகளும், 2019ல், 20.39 நீதிபதிகளும், 2020ல், 21.03 என்ற விகிதத்திலும் நீதிபதிகள் இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
06-ஆக-202109:50:27 IST Report Abuse
rajan ஏன் இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை என்பது புரிகிறது இப்போதைய மக்கள் தொகை பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்தது இன்னும் அப்படியே இருக்கும் என்று சொல்ல ஒன்றிய அரசு அமைச்சர் எதற்கு
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
06-ஆக-202108:44:47 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்த நாட்டில் நீதிபதிகள் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வது இல்லை.ஐம்பது லட்சம் ரூபாய் வரை ஒரு நாளைக்கு ஆஜராக கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞ்சர்கள் மூலம் வரும் நபர்களின் வழக்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் நீதிபதிகள் இருக்கும் இந்த நாட்டில் ஏழைக்களைப் பொறுத்தவரை நீதிமன்றங்கள் வீணே ஆகும்.
Rate this:
Cancel
G R Rajan - Mumbai,இந்தியா
06-ஆக-202106:42:29 IST Report Abuse
G R Rajan நண்பர்களே வணக்கம் இந்தக் கட்டுரை அல்லது இந்த செய்தி மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது 10 லட்சம் மக்களுக்கு சராசரியாக 21 நீதிபதிகள் இது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் மிகக்கொடிய குற்றம் புரிந்த அல்லது கொலை குற்றம் புரிந்தவர்களுக்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு நீதி வழங்கப்படுகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் சாதாரண குற்றம் அல்லது நீதியை எதிர்நோக்கும் அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் ஆகவே இதை சரி செய்ய நம்முடைய எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல நீதி நிர்வாகத்தை கொடுப்பதற்காக நாம் சில முயற்சிகளை எடுக்க வேண்டும் குறிப்பாக அரசாங்கத்திலிருந்து பியூரோ கரசி என்று சொல்லக்கூடிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய இந்திய ஆட்சிப்பணி அல்லது இந்தியக் காவல் பணி அல்லது அகில இந்திய பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அல்லது அதில் இருப்பவர்கள் சில வழிமுறைகளை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் குறிப்பாக கணினி சார்ந்த கட்டமைப்பில் குறைந்தபட்சம் 15 அல்லது அதற்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் இதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் முதலாவதாக 100 குடும்பத்திற்கு அல்லது ஒவ்வொரு ஊராட்சிக்கு ஒரு நீதிபதி குழு அந்த குழுவில் 1.கிராம நிர்வாக அலுவலர், 2.கிராம வேளாண்மை அலுவலர் அந்த கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட அல்லது பணிக்கப்பட்ட 3.காவலர் மற்றும் 4.வனத்துறை சரகர் 5.தீயணைப்புத்துறை அலுவலர் கிராமத்தில் 6.படித்த இளைஞர் படித்த அல்லது சமுதாய அக்கறை கொண்ட இளைஞர்கள் 7.ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர் 8.அந்த பகுதிக்கு உட்பட்ட பள்ளி ஆசிரியர் குறிப்பாக தமிழ் ஆசிரியர் மற்றும் 9. கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி 10.அந்த பகுதிக்கு உட்பட்ட இந்திய ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் உறுப்பினர்களாக இணைக்கப்பட வேண்டும். இவர்களுக்கு இந்த அரசாங்கம் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான செலவினங்களும் குடுக்க வேண்டியதில்லை கிராமம் தோறும் குறிப்பாக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவைகளில் இந்தக் குழுவிற்கு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் குறிப்பாக நிரந்தர கட்டமைப்பாக கிராம நீதிமன்றம், பகுதி நீதிமன்றம், நகர நீதிமன்றம் போன்றவைகளை ஏற்படுத்த வேண்டும். அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டும் கட்டிடம், கணினி மற்றும் இதர அடிப்படை தேவைகளை நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும் மற்றும் இதனை ஆவணப்படுத்த இந்தியா முழுவதற்கும் அல்லது ஒவ்வொரு மாநிலத்தில் மாநிலத்திற்கும் மாவட்ட வாரியாக ஒரு தகவல் உருவாக்க வேண்டும் பிறகு அதனை இந்தியா முழுவதற்குமான ஒருங்கிணைக்கப்பட்ட நீதி ஆணையத்தின் வாயிலாக இணைக்கப்படவேண்டும் வழக்குகள் கிராம நீதிமன்றம் மூலம் வரும் பொழுது இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு விசாரிக்கப்பட்டு எனக்கு இப்பொழுது இருக்கும் நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் பரிந்துரைக்கப்பட்ட 10 நாட்களுக்குள் நீதி வழங்கப்பட வேண்டும் இது மேல்முறையீட்டுக்கு செல்லும் பொழுதும் அதே பத்து நாட்கள் நீதி வழங்கப்பட வேண்டும் ஆக மொத்தம் ஒரு வழக்கு என்று வரும்பொழுது மிக அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் அல்லது 90 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் இதற்குப் பிறகு இப்படி செய்யும் பொழுது நீதி நிலைநாட்டப்படும் மனித குலத்திற்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும் அது அடுத்த நாகரீக முற்படுத்தப்பட்ட மனிதகுலத்திற்கு உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்
Rate this:
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
06-ஆக-202110:41:13 IST Report Abuse
Subramaniyam Veeranathan90 நாட்களுக்குள் நாட்டு மக்களுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டால், வருடக்கணக்காக மக்களை கோர்ட் வாசலில் நிற்கவைத்து நிரந்திரமாக வாழ்நாள்முட்டும் பிழைப்பை நடத்தும் நம்ம கருப்பு கோட்டு ஜாம்பவான்கள் எங்கே போவார்கள்???...
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
06-ஆக-202116:58:17 IST Report Abuse
DVRRமிக மிக முக்கியமான இன்னொன்று. ஒரு நீதிபதி தீர்வு வழங்கினால் அதுவே கடைசி தீர்ப்பு. (இன்னொரு அநீதிமன்றத்துக்கு கொண்டு போய் இன்னொரு எதிர் தீர்வு வழங்கினால் அது சரியல்ல. அப்படியென்றால் ஒன்று அந்த நீதிபதிக்கு அல்லது இந்த நீதிபதிக்கு சட்டம் தெரியவில்லை புரியவில்லை அல்லது சட்டம் படிக்கவில்லை என்று அர்த்தமா???) ஒரு வழக்கு ஒரு நீதிமன்றம் ஒரு தீர்வு 7 முதல் 30 நாட்களுக்குள் என்று வரையறுக்கப்படவேண்டும். மற்றும் ஜாமீன் வழக்கு ஒத்தி வைப்பு, கைதுக்கு பின் ஆஸ்பத்திரியில் அனுமதி அந்த வியாதி இந்த வியாதி என்று என்று ஒருக்காலும் இருக்கவே கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X