ஹிந்து கோவில் தீ வைத்து எரிப்பு: பாகிஸ்தானில் நடந்த அராஜகம்

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
லாகூர் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹிந்து கோவிலில், முஸ்லிம்கள் ஆவேச தாக்குதல் நடத்தியுள்ளனர். தீ வைக்கப்பட்டதால் கோவில் கடுமையாக சேதமடைந்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டத்தில் உள்ள போங்க் நகரில் 100க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூட்டமாக சென்று அங்குள்ள ஹிந்து
Pakistan,Hindu Temple,idols,பாகிஸ்தான்

லாகூர் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹிந்து கோவிலில், முஸ்லிம்கள் ஆவேச தாக்குதல் நடத்தியுள்ளனர். தீ வைக்கப்பட்டதால் கோவில் கடுமையாக சேதமடைந்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டத்தில் உள்ள போங்க் நகரில் 100க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூட்டமாக சென்று அங்குள்ள ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கோவில் சேதமடைந்துள்ளது. அங்கிருந்த கடவுள் சிலைகளையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஆக்ரோஷத்துடன் தாக்குதல் நடத்தியதால் போலீசாரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


போங்க் நகரில் உள்ள முஸ்லிம் வழிபாட்டு தலத்தில் உள்ள நூலகத்தில், 8 வயது ஹிந்து சிறுவன் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள், ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.


விஷ்ணு சிலை மீட்பு


நம் அண்டை நாடான வங்கதேசத்தில் குமிலா மாவட்டத்தில் 1,000 ஆண்டு பழமையான விஷ்ணுவின் கருங்கல் சிலை மீட்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் வீட்டில் இருந்து இந்த சிலை மீட்கப்பட்டுள்ளது. கிராமத்தில் குளம் தோண்டும்போது இந்த சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது. போலீசுக்கு தெரிவிக்காமல் வீட்டில் வைத்திருந்ததாக அந்த ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Laks Giri -  ( Posted via: Dinamalar Android App )
06-ஆக-202118:31:00 IST Report Abuse
Laks Giri நடுநிலைபேசுற யோக்கியர்கள் எங்கே?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
06-ஆக-202116:34:05 IST Report Abuse
DVRR அப்போ இங்கே லயோலா கல்லூரியை என்ன சொல்வது ???இந்துக்கள் கோவில்களை உடைத்து / இடித்து சர்ச்சும் மசூதியும் கட்டியிருக்கின்றார்களே அதை என்ன சொல்வது இதற்குத்தான் ஒரே சட்டம் வரவேண்டும். எல்லா மசூதியிலும் சிவன் கோவில் மசூதியின் ஒருபக்கம் துர்கை அம்மன் கோவில் மசூதியின் இன்னொரு பக்கம் இருக்கவேண்டும். அதே போல சர்ச்சில் இருபக்கமும் கிருஷ்ணா லட்சுமி கோவில் இருக்கவேண்டும். எல்லாம் அடங்கி விடும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-ஆக-202115:41:04 IST Report Abuse
Vena Suna இங்கே கழகங்கள் அவர்களுக்கு சொம்பு தூக்குகிறார்கள். இங்கும் அந்த நிலைமை வர விடாமல் இந்துக்கள் பா ஜா கவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X