கட்டுப்படுத்துங்க: விளம்பரம் பெயரில் சுவரில் போஸ்டர்கள் அலங்கோலமாகும் அரசு கட்டட சுவர்கள்| Dinamalar

தமிழ்நாடு

கட்டுப்படுத்துங்க: விளம்பரம் பெயரில் சுவரில் போஸ்டர்கள் அலங்கோலமாகும் அரசு கட்டட சுவர்கள்

Added : ஆக 06, 2021
Share
சிவகாசி-அரசு , தனியார் கட்டட சுவர்களில் சுவரொட்டி கலாசாரம் துவங்கியதால் நகர், கிராம பகுதிகள் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய ,நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவர்களில் சுவர் விளம்பரத்திற்கு பஞ்சில்லை. தனியார் நிகழ்ச்சிகளான திருமணம்,
  கட்டுப்படுத்துங்க:  விளம்பரம் பெயரில் சுவரில் போஸ்டர்கள்  அலங்கோலமாகும் அரசு கட்டட சுவர்கள்

சிவகாசி-அரசு , தனியார் கட்டட சுவர்களில் சுவரொட்டி கலாசாரம் துவங்கியதால் நகர், கிராம பகுதிகள் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய ,நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவர்களில் சுவர் விளம்பரத்திற்கு பஞ்சில்லை. தனியார் நிகழ்ச்சிகளான திருமணம், காதுகுத்து விசேஷங்களுக்கு சுவர்களில் போஸ்டர் ஒட்டுகின்றனர். இதுபோல் அரசியல்வாதிகள் தங்கள் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள், கட்சி கூட்டங்களுக்கும், தனியார் நிறுவனத்தாரின் விளம்பரங்களுக்கும் சுவரினைத்தான் பயன்படுத்துகின்றனர் . இதனால் சுற்றுச்சுவர் ,கட்டடங்களின் சுவர்கள் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சுவரில் விளம்பரம் செய்யாதே மீறினால் தண்டிக்கப்படுவீர் என எழுதி வைத்தால் அதன் மீதே போஸ்டர் ஒட்டுகின்றனர். போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் தடுக்க முடியவில்லை. சுவரை அலங்கோலப்படுத்துவதில் போட்டி போட்டு செயல்படுகின்றனர். இதை காணும் மக்கள் முகம் சுளிக்கின்றனர். நிகழ்ச்சி நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் தங்கள் வீட்டு சுவரிலோ , உறவினரின் வீட்டு சுவரையோ அலங்கோலப்படுத்துவதில்லை.

அரசு கட்டடம் என்றால் மட்டுமே துணிந்து செய்கின்றனர். இது போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.................தண்டனை விதியுங்கஊரடங்கு முன் அனைத்து அரசு கட்டடங்களிலும் சகட்டு மேனிக்கு சுவர் விளம்பரம் , போஸ்டர் ஒட்டுதல் என பல்வேறு விரும்பத்தகாத செய்கைகள் நடைபெற்று வந்தது. கொரோனா விழிப்புணர்வு வாசகம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது சுவர் விளம்பரம் அதிகரித்து விட்டது.

போஸ்டர் ஒட்டுதல், சுவரில் எழுதுதல் போன்றவற்றால் நகரின் தனித்துவம் கெடுகிறது. நகரின் அழகை கெடுப்பதற்கு போட்டி போட்டு செயல்படுகின்றனர். இதன் மீது கடுமையான தண்டனை அளித்தால் மட்டுமே கட்டுப்பாட்டிற்கு வரும்.முத்துக்குமார் , தனியார் ஊழியர், திருத்தங்கல்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X