தமிழ்நாடு

திண்டுக்கல் திரும்பும் வடமாநில தொழிலாளர்

Added : ஆக 06, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-- -திண்டுக்கல்லுக்கு மீண்டும் பணிக்காக வடமாநிலத்தவர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடப்படுவதால் கண்காணிப்பு அவசியம்.மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நூற்பாலைகள், பலவித தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் ஏராளமாக உள்ளன. இங்கு ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா என வடமாநிலத்தவர் 6000 க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

திண்டுக்கல்-- -திண்டுக்கல்லுக்கு மீண்டும் பணிக்காக வடமாநிலத்தவர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடப்படுவதால் கண்காணிப்பு அவசியம்.மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நூற்பாலைகள், பலவித தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் ஏராளமாக உள்ளன. இங்கு ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா என வடமாநிலத்தவர் 6000 க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

இது தவிர கட்டில், மெத்தை, பானிபூரி விற்பனை, ஓட்டல்களில் பணியாற்றுவது என பலபணிகளில் ஈடுபடுகின்றனர்.கொரோனா ஊரடங்கால் கடந்தாண்டு சொந்த ஊர் திரும்பியவர்கள் அரசால் அனுப்பி வைக்கப்பட்டனர். தளர்வுகள் அமலானதும் கடந்த ஜனவரியில் மீண்டும் திண்டுக்கல் வரத் தொடங்கினர்.

இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.அவர்கள் பணி செய்யும் நிறுவனம் அதற்கான முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது பின்பற்றப்படுகிறதா என கவனிக்க வேண்டும். தினமும் வேன்கள், பஸ்கள், ரயில்களில் என 100 க்கும் மேற்பட்டோர் வந்த வண்ணம் உள்ளனர். கொரோனா 3ம் அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் வடமாநிலத்தவர் வருகையை கண்காணிப்பது அவசியமாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X