நிபந்தனை; மேகமலையில் ரோடு அமைக்கும் பணிக்கு... தேசிய புலிகள் காப்பக அனுமதி கட்டாயம்| Dinamalar

தமிழ்நாடு

நிபந்தனை; மேகமலையில் ரோடு அமைக்கும் பணிக்கு... தேசிய புலிகள் காப்பக அனுமதி கட்டாயம்

Added : ஆக 06, 2021
Share
கம்பம்-மேகமலையில் நெடுஞ்சாலைத்துறையால் ரோடு அமைக்கும் பணிகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. அதனை மீண்டும் துவக்க டில்லியில் உள்ள தேசிய புலிகள் காப்பாக ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.சின்னமனுாரிலிருந்து மேகமலை, ைஹவேவிஸ், மணலாறு, அப்பர்மணலாறு, மகாராஜாமெட்டு, வெண்ணியாறு, இரவங்கலாறு வரை 46 கி.மீ. துாரத்திற்கு தனியாரிடமிருந்து
 நிபந்தனை; மேகமலையில் ரோடு அமைக்கும் பணிக்கு...  தேசிய புலிகள் காப்பக அனுமதி கட்டாயம்

கம்பம்-மேகமலையில் நெடுஞ்சாலைத்துறையால் ரோடு அமைக்கும் பணிகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

அதனை மீண்டும் துவக்க டில்லியில் உள்ள தேசிய புலிகள் காப்பாக ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.சின்னமனுாரிலிருந்து மேகமலை, ைஹவேவிஸ், மணலாறு, அப்பர்மணலாறு, மகாராஜாமெட்டு, வெண்ணியாறு, இரவங்கலாறு வரை 46 கி.மீ. துாரத்திற்கு தனியாரிடமிருந்து ரோட்டை கையப்படுத்தி நெடுஞ்சாலைத்துறை ரூ. 80 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்க துவங்கியது.

சில ஆண்டுகளாக ரோடு பணிகள் நடைபெற்று வருகிறது. சின்னமனுாரிலிருந்து மேகமலை, ைஹவேவிஸ், மணலாறு வரை 36 கி.மீ., துாரத்திற்கு ரோடு அமைப்பது முடிந்துவிட்டது. மீதமுள்ள 10 கி.மீ., துாரத்திற்கு புதுப்பிக்கும் பணிகள் கடந்தாண்டு துவங்கியது. ஜல்லி கற்கள் போட்டு மெத்தப்பட்டது.ஆனால் கடந்த மார்ச்சில் மேகமலை புலிகள் காப்பகமாக மத்திய வனஅமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.

அதனால் ரோடு பணிகள் நிறுத்தப்பட்டது. டில்லியில் உள்ள தேசிய புலிகள் காப்பக ஆணையத்திடம் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே எஞ்சிய பகுதியில் ரோடு அமைக்க அனுமதிக்கப்படும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‛ தேசிய புலிகள் காப்பக ஆணையம் பல்வேறு தகவல்கள் கேட்டுள்ளது. அதன்படி கடிதம் கொடுத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் ரோடு பணிகள் துவங்குவோம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X