தமிழ்நாடு

ஆக்கிரமிப்பின் பிடியில் கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய்;தண்ணீர் வராமல் ஒரு போக சாகுபடியும் பாதிக்கும் அபாயம்

Added : ஆக 06, 2021
Share
Advertisement
தேனி-வரத்துக்கால்வாய், நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பால் கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய் சில ஆண்டுகளாக நீர் நிரம்பாமல் ஒரு போக சாகுபடியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தேனி அருகே கொடுவிலார்பட்டியில் 40 ஏக்கர் பரப்பில் புதுக்குளம் கண்மாய் உள்ளது. இதில் தேங்கும் நீரை பயன்படுத்தி கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி பகுதியில் 70 ஏக்கர் நேரடியாகவும், கோட்டைபட்டி,
 ஆக்கிரமிப்பின் பிடியில் கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய்;தண்ணீர் வராமல் ஒரு போக சாகுபடியும் பாதிக்கும் அபாயம்

தேனி-வரத்துக்கால்வாய், நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பால் கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய் சில ஆண்டுகளாக நீர் நிரம்பாமல் ஒரு போக சாகுபடியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் 40 ஏக்கர் பரப்பில் புதுக்குளம் கண்மாய் உள்ளது. இதில் தேங்கும் நீரை பயன்படுத்தி கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி பகுதியில் 70 ஏக்கர் நேரடியாகவும், கோட்டைபட்டி, வீரசின்னம்மாள்புரம் பகுதியில் 100 ஏக்கர் மறைமுகமாக பாசன வசதி பெறுகிறது. பெரியாறு, வைகை அணைகளில் நீர்மட்டம் 5000 மி.கனஅடி நீர் இருந்தால் அக்டோபர் முதல் வாரம் முதல் டிசம்பர் வரை பி.டி.ஆர். கால்வாய், பெரியார் கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்படும். இந்த நீர் 16 கண்மாய்களை நிரப்பி தாடிச்சேரி, சிவலிங்கநாயக்கன்பட்டி வழியாக 4 கி.மீ வரத்துக் கால்வாய் வழியாக கடந்து 17 வதாக உள்ள புதுக்குளம் கண்மாய் நிரம்பும்.பயன் இல்லைஇக்கண்மாய்க்கு நீர் வரும் வரத்துக் கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்காததால் பி.டி.ஆர் ., கால்வாய் மூலம் நீர் வழங்கினாலும் முழுமையாக கண்மாய் வந்தடைவது இல்லை. கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்பு, முட்செடிகள் முளைத்து புதர் மண்டியுள்ளதால் இடையிலேயே நீர் விரையமாகிறது. சில இடங்களில் கால்வாயை வெட்டி சிலர் நீரை கொண்டு செல்கின்றனர். விவசாயிகள் ஒவ்வொரு முறையும் போராடி நீரை கொண்டு வந்தால் ஒரு போகத்திற்கு கூட பயன் அளிப்பது இல்லை.ஒரு காலத்தில் நஞ்சை நிலமாக இருந்து நெல்சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது புஞ்சை நிலமாக சாகுபடி செய்கின்றனர். விவசாய ஆக்கிரமிப்பால் பரப்பளவு சுருங்கி அதிக நீர் தேக்க வழியில்லை என புலம்புகின்றனர்.அவர்கள் கூறியதாவதுகால்வாய் ஆக்கிரமிப்புபாண்டி, பள்ளபட்டி: புதுக்குளம் கண்மாய் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பில் சுருங்கி புதர் மண்டியுள்ளது. தண்ணீர் திறந்து விட்டாலும் கண்மாய்க்கு வர முடியாத அளவில் ஆங்காங்கே தடுத்து நீரை திருப்பி கொள்கின்றனர். இக்கண்மாய் தெற்கு பகுதியில் 10 ஏக்கர் வரை ஆக்கிரமித்து வாழை போன்றவை பயிரிட்டுள்ளனர். மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதனால் கண்மாய் முழுமையாக நிரம்புவதில்லை. பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது. குடிமராமத்து திட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றி, கண்மாய் துார்வாரி, கரைகள் பலப்படுத்த வேண்டும். மறுகால் தடுப்பணை சேதமடைந்துள்ளது. இதனை உயர்த்தி முழுமையாக நீரை தேக்க வேண்டும்.ஷட்டர் சேதம் சுப்பையா, பள்ளபட்டி: தண்ணீர் பற்றாக்குறையால் 7 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளேன். கண்மாய் பல ஆண்டுகளாக பராமரிக்க வில்லை. தெற்கு பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளது. பி.டி.ஆர். கால்வாயில் திறக்கும் 100 கனஅடிநீர் முழுமையாக இக் கண்மாய்க்கு வந்து சேரும் வகையில் கால்வாய் சீரமைக்க வேண்டும். ஷட்டர் பழுதாகி பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி சேதமடைந்துள்ளது. இதனால் கால்வாய் மூலம் நீரை கொண்டு செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றி கரை பலப்படுத்த வேண்டும்.

அகற்றப்படும்

பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், 'இந்த ஆண்டு புதுக்குளம் கண்மாய், வரத்து வாய்க்கால் பராமரிப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆக்கிரமிப்பு அகற்றப்படும். பி.டி.ஆர்., கால்வாய் மூலம் 4 ஆண்டுகளாக தண்ணீர் வழங்குகிறோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X