பொது செய்தி

தமிழ்நாடு

பாடப்புத்தகத்தில் ஜாதி பெயர் நீக்கம்: தி.மு.க., ஆட்சியில் நடந்ததாக சொல்வதா?

Added : ஆக 06, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை : பாடப் புத்தகத்தில், தமிழ் அறிஞர்களின் பெயரில் இருந்த ஜாதி பெயர்களை, அ.தி.மு.க., ஆட்சியில் நீக்கி விட்ட நிலையில், தி.மு.க., ஆட்சியில் எடுத்த நடவடிக்கை போல தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ள, தமிழ் அறிஞர்களின் ஜாதி பெயர்களை நீக்கி, சமூக சீர்திருத்தம் செய்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. ஜாதி, மதம் கடந்த
Tamil textbook, drops, caste surnames, DMK

சென்னை : பாடப் புத்தகத்தில், தமிழ் அறிஞர்களின் பெயரில் இருந்த ஜாதி பெயர்களை, அ.தி.மு.க., ஆட்சியில் நீக்கி விட்ட நிலையில், தி.மு.க., ஆட்சியில் எடுத்த நடவடிக்கை போல தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ள, தமிழ் அறிஞர்களின் ஜாதி பெயர்களை நீக்கி, சமூக சீர்திருத்தம் செய்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. ஜாதி, மதம் கடந்த நல்லிணக்கத்துக்கு அடையாளமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, தி.மு.க., ஆதரவாளர்கள் பலர், சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகின்றனர்.


அ.தி.மு.க.,வின் சீர்திருத்தம்


இதன் உண்மை நிலையோ வேறு என, பள்ளி கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் கூறுகின்றனர். தற்போதைய தி.மு.க., அரசில், முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலராக உள்ள உதயசந்திரன், அ.தி.மு.க., ஆட்சியில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலராக இருந்தார். அப்போது, பள்ளி கல்வி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, மறைந்த அண்ணா பல்கலை துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில், பாடத்திட்ட மாற்றத்துக்கான கமிட்டி அமைக்கப்பட்டது.

முதன்மை செயலராகவும், பாடத்திட்ட செயலராகவும் பணியாற்றிய உதயசந்திரனின் நேரடி பார்வையில், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடங்களை மிஞ்சும் வகையில், தமிழகத்தின் புதிய பாடத்திட்டம், 2018ல் மாற்றப்பட்டு, 19ல் அமலுக்கு வந்தது.அப்போது, உதயசந்திரன் மற்றும் அனந்தகிருஷ்ணன் ஆகியோரின், நேரடி சீர்திருத்த நடவடிக்கையாக, புத்தகங்களில் இருந்த தமிழ் அறிஞர்களின் பெயர்களில், ஜாதி பெயர்கள் நீக்கப்பட்டன.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, ராமலிங்கமாகவும்; உ.வே.சாமிநாத அய்யர், உ.வே.சாமிநாதன் மற்றும் உ.வே.சா.,வாகவும்; மாயவரம் வேதநாயகம் பிள்ளை, வேதநாயகமாகவும் மாற்றப்பட்டு, புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியாகின. மேலும், கி.மு., என்ற கிறிஸ்து பிறப்புக்கு முன் மற்றும் கி.பி., கிறிஸ்து பிறப்புக்கு பின் என்ற ஆண்டு பெயர் குறிப்பும், பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்கு பின் என்று, பாடத்திட்டத்தில் மாற்றப்பட்டது.


latest tamil news
அதிகாரம் இல்லா கழகம்


இந்த சமூக சீர்திருத்தத்தை, தி.மு.க., ஆட்சியில் செய்ததாக, உண்மைக்கு மாறான தகவல்கள் பரவுவதாக, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும், இந்த மாற்றத்தை, பாடநுால் கழகம் செய்துள்ளதாக தகவல் பரப்புகின்றனர். பாடநுால் கழகம் என்பது, புத்தகத்தை அச்சிட்டு கொடுக்கும் அச்சு நிறுவனம் மட்டுமே; அந்த நிறுவனத்துக்கு, பாடப்புத்தகம் அல்லது வேறு வெளியீட்டு புத்தகங்களில் உள்ள பாட சாராம்சங்களில் ஒரு எழுத்தை கூட மாற்ற, அதிகாரம் கிடையாது; அந்த நிறுவனம், அப்பணியை செய்வதுமில்லை என்பது தான் உண்மை.

அதேபோல், நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் அனைத்தையும் அச்சிடும் பணிகள், அ.தி.மு.க., ஆட்சி நடக்கும் போதே துவங்கி விட்டன. தேர்தல் முடிந்த போது, பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணியும் பெரும்பாலும் முடிந்து விட்டது. இந்நிலையில், தி.மு.க., அரசு பதவியேற்ற பின், நடப்பு கல்வி ஆண்டுக்கான, முதல் பருவம் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான, முதல் பாக புத்தகங்களில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதே உண்மை என, ஆசிரியர்களும், பள்ளி கல்வி அலுவலர்களும் தெரிவித்துள்ளனர்.


ஆசிரியர் சங்கம் வருத்தம்!


தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் இளமாறன் அறிக்கை:பதினான்கு ஆண்டுகள் மாற்றப்படாத பாடத்திட்டம், அ.தி.மு.க., ஆட்சியின் போது மாற்றப்பட்டு, 2019ல் அமல்படுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பாடத்திட்டம் அடிப்படையில், அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்களே, தற்போதும் நடைமுறையில் உள்ளன.அப்போதே, தமிழ் அறிஞர்களின் ஜாதி பெயர்கள் நீக்கப்பட்டன. பாடத்திட்டத்தில் தற்போது, எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. ஆனால், தி.மு.க., அரசு மாற்றம் செய்தது போல், சமூக வலைதளங்களில் குறிப்பிடுவது வருத்தத்துக்குரியது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


குழப்பமில்லா பாடம்!


பாடநுால் கழக தலைவர் லியோனி அளித்த பேட்டி:ஜாதி பெயர் நீக்கமானது, 2019ல், அ.தி.மு.க., ஆட்சியில் எடுத்த முடிவாகும். மீண்டும், ஜாதி பெயர்கள் சேர்க்கப்படுமா என்பதை, முதல்வர் தலைமையில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். வருங்காலத்தில் குழப்பமில்லாத பாடத்திட்டத்தை அமைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு பரிந்துரைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
06-ஆக-202115:02:38 IST Report Abuse
yavarum kelir அப்போ, இனிமே சாதி வாரியான இட ஒதுக்கீடு எல்லாம் ரத்தாகுமா கோப்ப்பால்.
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
06-ஆக-202114:44:21 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam திமுகவினர் "வாய்ச் சொல்லில் வீரரடி, கண்ணம்மா". 1989 - 1991 அதன்பின் 2021 - 2022 என்பது என்ன என்று திரு நேரு அவர்களிடம் அறியலாம்.
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
06-ஆக-202114:29:07 IST Report Abuse
vivek c mani ஜாதி பெயர்களை பள்ளி புத்தகங்களில் மட்டும் நீக்கி என்ன பயன்? ஜாதி பிரிவு ஒன்றும் கிடையாது எனும் நிலை எங்கே ? எந்த ஜாதி ஆளை தேர்தல்ல நிக்க வெச்சா வெற்றி கிடைக்கும் என்று பாக்கும் போது ஜாதி எப்படி முளைக்குது? எந்த எந்த பகுதிகளில் எந்த ஜாதி காரங்க இருக்காங்க அப்படி துருவும் போது ஜாதி காணாமல் போய் விடுமா ? அரசாங்க சலுகைகள் ஜாதி வழியில் இன்னும் கொடுக்கும் போது ஜாதி எங்கு ஒழிந்தது? மேலும் மேலும் முன்பு ஜங்களுக்கு தெரியாம யிருந்த ஜாதிகளையெல்லாம் சல்லடை போட்டு கண்டுபிடிச்சு பட்டியலில் சேர்க்கும் போது ஜாதி ஏன் ஞாபகம் வந்துச்சு? கிழிசல்களை மறைக்க மேலொரு துணி போடுவதால் கிழிசல்கள் காணாமல் போகுமா? புஸ்தகத்திலிருந்து நீக்கினா ஜாதி ஒழிஞ்ச மாதிரி ஆகிடுமா ? பிள்ளையை ஐந்து விரல்களால் கிள்ளுவதும் பின்பு நக முனை கொண்டு தொட்டிலை ஆட்டி காட்டுவதும் இவர்களுக்கு கைவந்த கலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X