கடைக்கு செல்ல சான்றிதழ்: கேரள அரசு புதிய யுக்தி

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
திருவனந்தபுரம்:'தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களை கையில் வைத்து கொண்டு கடை, வங்கிகளுக்கு செல்ல வேண்டும்' என, பொதுமக்களுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.கேரளாவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் அரசும், சுகாதாரத் துறையும் திணறி வருகின்றன. இந்நிலையில் திருவோண பண்டிகைக்காக கடைகளை
Kerala, Corona Vaccine, Covid 19, Corona Virus

திருவனந்தபுரம்:'தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களை கையில் வைத்து கொண்டு கடை, வங்கிகளுக்கு செல்ல வேண்டும்' என, பொதுமக்களுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கேரளாவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் அரசும், சுகாதாரத் துறையும் திணறி வருகின்றன. இந்நிலையில் திருவோண பண்டிகைக்காக கடைகளை திறக்க அனுமதி வழங்கினாலும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி கடைகள், மார்க்கெட், வங்கி, திறந்தவெளி சுற்றுலா மையம், வியாபார நிறுவனங்களுக்கு செல்பவர்கள் குறைந்த பட்சம் இரண்டு வாரத்துக்கு முன், முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழ் இல்லையெனில் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை 'நெகடிவ்' சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இதன் வாயிலாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என, கேரள அரசு கருதுகிறது.


latest tamil newsஅரசின் இந்த முடிவுக்கு காங்., தலைமையிலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அவர்கள் கூறுகையில், 'கேரளாவில் 42 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு மக்களை பெரிய அளவில் பாதிக்கும்' என்கின்றனர்.மாநில அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathanban Vs - tirupur,இந்தியா
06-ஆக-202117:00:11 IST Report Abuse
Bharathanban Vs தடுப்பூசிகளின் செயல்திறன் அதிகபட்சம் 95 சதவீதம்... ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரானா வந்துள்ளவர்களின் எண்ணிக்கை .5 சதவீதத்திற்கு கீழ். எதையும் ஒழுங்காக தெரிந்துகொள்ளாமல் மக்களை திசைதிருப்பாதீர்கள். டாக்டர் சதீஸ் மணிகண்டன் என்ற பெயரில் பதிவிடுபவரின் பெயரிலையே எழுத்துப்பிழை... இவரெல்லாம் டாக்டரா? தர்மவான் இப்பவாவது மோடி இலவசமாக ஊசி கொடுக்கிறார் என்பதை ஒத்துக் கொள்கிறாரே....
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
06-ஆக-202110:50:59 IST Report Abuse
sridhar பக்ரீத் பண்டிகைக்கு சலுகை தந்ததால் வந்த வினை. நீதிமன்றம் கர்வா யாத்திரையை தடுத்தது, பகரித்தை கண்டுக்கலை .. செகுலரிஸ்ம்
Rate this:
06-ஆக-202113:45:04 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்என்ன பண்ணுவது கண்டவன் எல்லாம் அறிவுரை சொல்லுவான் என்று சொன்னால் யார் கேட்கிறார்கள் அங்கே மோடி கும்பமேளா என்று கூடி கங்கையில் பிணங்களை மிதக்க விட்டு , ஒரு பொறுப்புள்ள பிரதமர் சேயும் வேலையை செய்து புண்ணியம் தேடி கொண்டார் , இங்கே இவர் இப்படி இதில் ஆடி அம்மாவாசை தர்ப்பணம் பண்ணனும் என்று துடிக்கிறார்கள் சிங்கி பசங்கள்...
Rate this:
Bharathanban Vs - tirupur,இந்தியா
06-ஆக-202116:57:04 IST Report Abuse
Bharathanban Vsதர்மராஜ் என்ற பெயரில் பதிவிடும் நண்பரே... உங்கள் பதிவுகளில் நாகரீகமோ அல்லது பொதுஅறிவோ சுத்தமாக இல்லையே... மோடி எதிர்ப்பு என்ற பாதிப்புக்குள்ளாகியிருக்கிறீர்கள்.. கும்பமேளாவில் எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டது என்ற புள்ளிவிபரம் தெரியுமா? கங்கையில் பிணங்களை அரசு போட்டதா?...
Rate this:
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
06-ஆக-202109:22:46 IST Report Abuse
Ganapathy நாம் இங்கே எவ்வளவு அறிவீனமாக கருத்துக்களை கூறுகிறோம் . கொரோன தொற்று என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயம் அல்ல . இந்த உலகம் சற்றும் எதிர்பாராத பேரழிவு . இதில் மலையாளி கோவை சென்று பரப்புகின்றன என்றல், இடுக்கி மாவட்டத்தின் அடுத்துள்ள தமிழக தொழிலார்கள் அங்கே வேலைக்கு போறாங்களே அவர்கள் கேரளாவில் பரப்புகிறார்களா, அல்லது கன்னியாகுமாரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருந்து வரும் வியாபாரிகள், வேலைக்கார செல்பவர்கள் த்ரிவனந்தபுரத்தில் கொரோனவை பரப்புகிறார்காலா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X