பொது செய்தி

இந்தியா

எல்லையில் ஊடுருவ 140க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் திட்டம்

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ 140க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் எல்லையில் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் இடையே பிப்., ல் நடந்த தொலைபேசி உரையாடலை அடுத்து, எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பின் 'கிரே'
140 terrorists, waiting, LoC, India

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ 140க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் எல்லையில் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் இடையே பிப்., ல் நடந்த தொலைபேசி உரையாடலை அடுத்து, எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பின் 'கிரே' பட்டியலில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவே பாக்., இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உடன்பட்டது.


latest tamil news



இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கடந்த ஆண்டு நம் ராணுவத்தினரால் தகர்த்து அழிக்கப்பட்ட பயங்கரவாத கட்டமைப்புகளை பாக்., மறுசீரமைப்பு செய்து வருகிறது.ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ 140க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர். நம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அஞ்சி, ஊடுருவல் முயற்சியில் இதுவரை ஈடுபடவில்லை.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் முற்றிலுமாக குறைந்து உள்ளது. அவர்கள் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகள், மலைப்பகுதிகளில் உள்ள குகைகளில் தஞ்சம் அடைந்திருக்கக் கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
06-ஆக-202120:38:25 IST Report Abuse
Rajagopal பாகிஸ்தானில் வேலை இல்லை போல. எவனை எடுத்தாலும் கலகக்காரனாகத்தான் தெரிகிறான்.
Rate this:
Cancel
06-ஆக-202116:51:26 IST Report Abuse
ராமகிருஷ்ணன் காங்கிரஸ் கால ராணுவம் அல்ல. மோடியின் வீரமிகு ராணுவம் உள்ளது. கொசுவை தட்டுவதை போல தட்டி நச்சி விடுவார்கள்.
Rate this:
Cancel
06-ஆக-202116:38:09 IST Report Abuse
தேச பக்தன் இந்திய இராணுவத்தின் கையால் இறைவனிடம் செல்வதற்கு வருகிறார்கள், வாழ்த்துக்கள். காஷ்மீரிலும் சரி ஒட்டு மொத்த இந்தியாவிலும் முன்பு போல் குண்டு வெடிக்கவில்லை, தீவிரவாதத்தின் வால் அறுக்கப்பட்டுள்ளது. வாழ்க மோடி ஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X