அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் ஹிந்தி மொழி

Added : ஆக 06, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் அதிகம் பேசும் முதல் ஐந்து மொழிகளில் ஹிந்தியும் இடம் பெற்றுள்ளது.அமெரிக்காவில் ஆசிய - அமெரிக்க நீதி மையத்தின் தலைவராக ஜான் யங் என்பவர் உள்ளார். இவர், அமெரிக்க உள்துறை பாதுகாப்பு மற்றும் அரசு விவகாரங்களுக்கான செனட் குழுவில் ஆசிய அமெரிக்கர்கள் குறித்து அறிக்கை அளித்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
US, America, Hindi

வாஷிங்டன் : அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் அதிகம் பேசும் முதல் ஐந்து மொழிகளில் ஹிந்தியும் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் ஆசிய - அமெரிக்க நீதி மையத்தின் தலைவராக ஜான் யங் என்பவர் உள்ளார். இவர், அமெரிக்க உள்துறை பாதுகாப்பு மற்றும் அரசு விவகாரங்களுக்கான செனட் குழுவில் ஆசிய அமெரிக்கர்கள் குறித்து அறிக்கை அளித்துள்ளார்.


latest tamil news



அதில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய வம்சாவளியினரில் மூன்றில் இரு பங்கினர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இவர்களில் 52 சதவீதம் பேருக்கு ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் குறைவாகவே உள்ளது. இவர்கள் சீனாவில் பேசப்படும் மாண்டரின், பிலிப்பைன்ஸ் நாட்டின் தகலக், கொரியா, வியட்னாமிஸ் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளை அதிகம் பேசுகின்றனர்.

கொரோனா பிரச்னையால் அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய நாட்டவர்களின் சுகாதாரம், நிதியாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு ஆசியா காரணம் என்ற தவறான கருத்தால் நிறவெறி வன்முறைக்கும் ஆளாகியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan - Bangalore,இந்தியா
06-ஆக-202118:00:45 IST Report Abuse
Balakrishnan இந்தியாவின் ஹிந்தி பேசும் மாநிலங்கள் 10 நாடுகளுக்கு சமம். இங்கு வாழும் மக்களோடு தொர்பு கொண்டு செய்ய வேண்டிய பல வேலைகளுக்கு ஹிந்தி தேவை. தமிழர்கள் இந்த வேலைகளை இழக்கிறார்கள் என்பது உண்மை.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
07-ஆக-202108:44:40 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN"தமிழர்கள் இந்த வேலைகளை இழக்கிறார்கள் என்பது உண்மை." டீம்காவுக்கு ஆதரவா எழுதி நிறையவே சம்பாதிக்கிறோம் கருப்பு பலூன் விட்டு நிறைய சம்பாதிக்கிறோம் கோ பேக் மோடி என்று கத்தி, பேனர் பிடித்து நிறைய சம்பாதிக்கிறோம் இந்தியாவுக்கு எதிரா, மோடிக்கு எதிரா. பிஜேபிக்கு எதிரா மீம்ஸ் உருவாக்கி அதை சமூக வலைத்தளங்களில் போட்டு நிறையவே சம்பாதிக்கிறோம் ஆகவே ஹிந்தி பேசும் மாநிலங்களில் சம்பாதிக்க எங்களுக்கு அவசியமே இல்லை இருந்தாலும் உங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி...
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
06-ஆக-202117:44:45 IST Report Abuse
M  Ramachandran அமெரிக்காவில் நம்மைய காணும் போது சர்தார்ஜி சரளமாக ஹிந்தியில் பேச்சசை ஆரம்பித்து விடுவார்கள். இங்கலாந்தில் எங்கு சென்றாலும் சிறிய கிராமமாக இருந்தாலும் சர்தார்ஜி களை காணாலாம். அவர்கள் எங்கு நாம் செல்லவேண்டும் என்று நமக்கு தெரியாவிட்டால் அவர்கள் நிதானமாக வழி சொல்லுவார்கள். லண்டனில் மற்றும் பர்மிங்ஹாம் ஊர்களில் பஸ் ஓட்டுனார்க்கவும் டாக்ஸி ஓட்டுனர்கள்லாகவும் பார்க்கலாம்..
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
06-ஆக-202117:37:16 IST Report Abuse
M  Ramachandran அமெரிக்கர்கள் என்று ஒரு பிரிவினர் அங்கு இல்லை. ரெட் இந்தியன்ஸ் தான் ஒரிஜினல் அமெரிஸான்ஸ். அவர்களை ஆங்கிலேயர்கள் மற்றும் ஐ ரோபியர்கள் வேட்டையாடி (துப்பாக்கி கலாச்சாரம்) கொன்றனர்.இப்போ சிலர் மாட்டவும் எங்கோ மலையோர காடுகளில் ஒளிந்து வாழ்கின்றனர். பெரும்பாலும் அமெரிக்காவில் டாமினோடே செய்வது மேக் ஸ்சிகன்ஸ் தான்.மெக்ஸிகோ விலிருந்து குடிபெயர்ந்தவர்கள். ஆனால் முரட்டு ஸ்வபாவம் உள்ளவர்கள். எளிதில் சண்டைக்கு வருபவர்கள். நம்மூர் காரர்கள் அவர்களை கண்டால் (துஷ்டனைக் கண்டால் தூர ஓடு) என்பதை போல் ஒதுங்கி செல்வார்கள்.அவர்கள் கலாச்சாரம் தான் முழு அமெரிக்கா வாழ் மக்களை பயம் கொள்ள செய்கிறது. குழந்தைகளை வளர்ப்பதில் மிக கவனம் எடுத்து கொள்வார்கள்.நம் ஊர் மக்கள் அவர்கள் உண்டு அவர்கள் வேலையை உண்டு இருப்பார்கள். மற்றும் குழந்தைகள் படிப்பு மற்றும் நம்கலாச்சாரம் ஒத்து உள்ளவர்களையும் தமிழய்யும் தனி வகுப்புகளில் சேர்த்து கற்க வைக்கிறார்கள். தனியே தமிழில் செய்தி மலர்கள் முதலியன நடத்துவதும் கோயில்களை பராமரிப்பதும் வெள்ளி தவிர மற்ற நேரங்களில் செய்கிறார்கள். சீனர்கள் சத்தம்போஆடாமால் அலகு அவர்கள் ஜனத்தொகையாய் பெருக்குகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் சீனா டவுன் பிரபல்யம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X