பொது செய்தி

இந்தியா

போலி இணைய கணக்குகள் மூலம் இந்தியாவை சீண்டும் சீனா!

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: சீனா இந்தியாவுடன் தொடர்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. இணையத்தின் வாயிலாக தற்போது மறைமுகமாக மோதல் துவங்கியுள்ளது.இணையத்தில் பலவித போலி செய்திகள் அவ்வப்போது உலா வருகின்றன. இவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் பலர் இதனை நம்பிப் பகிர்கின்றனர். கொரோனா பரவல் இந்தியாவில் அதிகமாக உள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த
India, China, Fake network

புதுடில்லி: சீனா இந்தியாவுடன் தொடர்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. இணையத்தின் வாயிலாக தற்போது மறைமுகமாக மோதல் துவங்கியுள்ளது.

இணையத்தில் பலவித போலி செய்திகள் அவ்வப்போது உலா வருகின்றன. இவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் பலர் இதனை நம்பிப் பகிர்கின்றனர். கொரோனா பரவல் இந்தியாவில் அதிகமாக உள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தடுப்பு மருந்து விநியோகமும் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மத்திய அரசின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் இந்தியர்கள் மத்தியில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கவும் தற்போது சீனாவின் உதவியுடன் 350க்கும் மேற்பட்ட சமூக வலைத்தள கணக்குகள் இயங்கி வருவதாக சிஐஆர் எனப்படும் மத்திய சமூக வலைதள ஆய்வு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது.


latest tamil newsஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்தியாவில் தடுப்பு மருந்து விநியோகம் சரியாக நிர்வாகிக்கப்படவில்லை என இந்த போலி கணக்குகள்மூலம் விஷமிகள் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இந்த வேலையைச் செய்யும் போலி நபர்களுக்கு மறைமுகமாக சீன கம்யூனிச அரசு நிதி அளித்து உதவி வருகிறது என இந்த உலக அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க துப்பாக்கி பயன்பாட்டுச் சட்டங்கள், சீனாவின் ஜின்ஜியாங் விவகாரம், அமெரிக்க-இந்திய மோதல்போக்கு உள்ளிட்ட பல விஷயங்கள் போலி கணக்குகள் மூலமாக பகிரப்படுகின்றன. அமெரிக்காவில் தேவைக்கு அதிகமான தடுப்பு மருந்துகள் இருந்தும் திட்டமிட்டு அமெரிக்கா இந்தியாவுக்கு தடுப்பு மருந்துகளை விநியோகிக்க மறுக்கிறது என்று போலி செய்தி பரப்பப்படுகிறது.

இவ்வாறாக அமெரிக்கா-இந்தியா இடையே மோதலை ஏற்படுத்தும் போலி கருத்துக்கள் பரப்பப்படும் அதே வேளையில் சீனாவுக்கு ஆதரவான கருத்துகளும் பரப்பப்படுகின்றன. டிவிட்டர் வலைதளத்தில் 300 லிருந்து 500 போலி கணக்குகளும், பேஸ்புக் தளத்தில் 40 முதல் 55 கணக்குகளும், யூடியூப் தளத்தில் 12 கணக்குகளும் உள்ளதாக இந்திய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய தொழிலதிபர்களின் கருத்துக்களை திரித்து வெளியிடுவது இந்த போலி கணக்கு வைத்திருக்கும் நபர்களின் முக்கிய வேலை. இந்திய அரசுமீது இந்தியர்களுக்கு வெறுப்பை தூண்டவும் சீனாமீது பற்றை அதிகரிக்கவும் இந்த வேலை பல மாதங்களாக நடந்துவருகிறது. இதன்மூலமாக மத்திய மோடி அரசுக்கு எதிராக இந்தியர்களை திசை திருப்ப சீன அரசு முயல்கிறது என்று கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202119:03:49 IST Report Abuse
அப்புசாமி தகிடுதத்தம்னு வரும்போது அமெரிக்காவை அடிச்சுக்க ஆள் இல்லை. அங்கேயும் சீனாவிலிருந்து இறக்குமதி வெகுஜோர். நாமளும், சீனாவிலிருந்து இறக்குமதியை அதிகமாக்கிட்டு வர்ரோம்.
Rate this:
Cancel
Laks Giri -  ( Posted via: Dinamalar Android App )
06-ஆக-202118:25:19 IST Report Abuse
Laks Giri நாட்டுக்கு விசுவசமா இருப்பது தவறா?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
06-ஆக-202112:20:18 IST Report Abuse
S. Narayanan இந்தியாவில் இருந்து கொண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டில் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு இந்தியாவை அவர்களிடம் அடிமை படுத்த நினைக்கும் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் முகம் ஒவ்வொரு உண்மை இந்தியனுக்கு தெரிந்து விட்டது என்பதால் காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகள் பார்லிமென்டில் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் உலகமே காரி துப்புகிற நிலைக்கு வந்து விட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X