நீங்கள் வெகுபிரபலம் என்பதால் சுற்றுப்பயணம் வேண்டாம் என்கிறீர்களோ...| Dinamalar

நீங்கள் வெகுபிரபலம் என்பதால் சுற்றுப்பயணம் வேண்டாம் என்கிறீர்களோ...

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (18)
Share
உலகம் முழுக்க காற்று இருந்தாலும், சைக்கிள் டியூபில் காற்று இருந்தால் தான் வண்டி ஓடும். எனவே, தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்வது போன்ற செயல்களை நான் செய்ய மாட்டேன். அதற்குப் பதில், ஒவ்வொரு கிராமத்திலும் கொடிக்கம்பம் நட்டு, கட்சியை வளர்க்க உள்ளேன்.- தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை'வழக்கமாக, பா.ஜ., தலைவர்கள் தங்களை பிரபலப்படுத்த சுற்றுப்பயணம் மேற்கொள்வர். நீங்கள்
நீங்கள் வெகுபிரபலம் என்பதால் சுற்றுப்பயணம் வேண்டாம் என்கிறீர்களோ...

உலகம் முழுக்க காற்று இருந்தாலும், சைக்கிள் டியூபில் காற்று இருந்தால் தான் வண்டி ஓடும். எனவே, தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்வது போன்ற செயல்களை நான் செய்ய மாட்டேன். அதற்குப் பதில், ஒவ்வொரு கிராமத்திலும் கொடிக்கம்பம் நட்டு, கட்சியை வளர்க்க உள்ளேன்.
- தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை


'வழக்கமாக, பா.ஜ., தலைவர்கள் தங்களை பிரபலப்படுத்த சுற்றுப்பயணம் மேற்கொள்வர். நீங்கள் வெகுபிரபலம் என்பதால், சுற்றுப்பயணம் வேண்டாம் என்கிறீர்களோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி.இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதில், பா.ம.க.,வுக்கு எந்த பங்கும் இல்லை. அது, வன்னிய தலைவர்களின் பல்லாண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
- தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன்


'நல்லவேளை, ராமதாஸ் அதற்காக துளியும் போராடவில்லை என சொல்லாமல் போனீர்களே...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி.'ஒன்றிய தொகுப்பு மருத்துவ கல்வி இடங்களில், தமிழகத்தில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு, 50 சதவீதம் ஒதுக்கப்படவேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும், 27 சதவீதம் மட்டுமே ஒதுக்கியுள்ள மத்திய அரசை எதிர்த்து, தி.மு.க., வழக்காடுகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., இதை வலியுறுத்துமா?
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


latest tamil news
'காங்., செய்தி தொடர்பாளராக இருக்கும் நீங்கள், மாநில சிறுபான்மை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, தி.மு.க., செய்தி தொடர்பாளராக மாறி விட்டீர்களோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது, உங்கள் அறிக்கை...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.தமிழக தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்படுத்தி வரும் ஹிந்து விரோத போக்கை கண்டித்து பழநி தேவஸ்தான அலுவலக முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏனெனில், சர்ச், மசூதிகள் திறந்திருக்கும் போது எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், ஆடி 18 போன்ற விழா காலங்களில் கோவில்கள் மூடப்பட்டதைகண்டிக்கிறோம்.
- ஹிந்து முன்னணி அமைப்பு


'அங்கெல்லாம் மக்கள் கூட மாட்டார்கள்; ஹிந்து கோவில்களில் தான் பெரும் திரளாக கூடுவர் என்ற நினைப்பு அரசுக்கு. அதனால் தான், திடீர் தடை விதித்தது...' என, கூறத் தோன்றும் வகையில், ஹிந்து முன்னணி அமைப்பு அறிக்கை.ஆட்சி எப்போது வேண்டுமானாலும் எங்களுக்கு கிடைக்கட்டும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. பணம் கொடுத்து, ஓட்டுகளை வாங்கி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற கட்டாயம் எனக்கில்லை. கட்சியை நான் அடமானம் வைத்து விடமாட்டேன் என்ற எண்ணத்தில் தான் ஏராளமான இளைஞர்கள் என் பின் வருகின்றனர். அதை பொய்யாக்க மாட்டேன்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'அப்போ, ஆட்சிக்கு வந்தவர்கள் எல்லாரும் பணம் கொடுத்து தான் ஓட்டுகளை வாங்கி வந்தனரா...' என, அப்பாவித்தனமாக கேட்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X