சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கைதிகள் சுக வாழ்க்கை: ஒரே நேரத்தில் 9 சிறைகளில் சோதனை

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சிறையில் சகலவிதமான வசதிகளுடன், கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், தமிழகத்தில் உள்ள, ஒன்பது மத்திய சிறைகளிலும், ஒரே நேரத்தில், 600க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.தமிழகத்தில், புழல் உட்பட, ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இது தவிர, மாவட்ட, மகளிர் மற்றும் தனிச்சிறைகள் என, 129 சிறைகள் உள்ளன. 'ஸ்டார்
கைதிகள், சுக வாழ்க்கை, சிறை, சோதனை

சென்னை: சிறையில் சகலவிதமான வசதிகளுடன், கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், தமிழகத்தில் உள்ள, ஒன்பது மத்திய சிறைகளிலும், ஒரே நேரத்தில், 600க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், புழல் உட்பட, ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இது தவிர, மாவட்ட, மகளிர் மற்றும் தனிச்சிறைகள் என, 129 சிறைகள் உள்ளன.


'ஸ்டார் ஓட்டல்'


சென்னை, புழல் மத்திய சிறை வளாகத்தில் மட்டுமே மூன்று சிறைகள் உள்ளன. அதில், தண்டனை கைதிகளை அடைக்கும் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவு உள்ளது. அங்கு தான், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, பயங்கரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல, சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களும் புழல் மத்திய சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், 'ஸ்டார்' ஓட்டலுக்கு நிகராக அறைகளை மாற்றி, ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அதை, 'செல்பி' எடுத்து, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக உறவினர்கள் மற்றும் வெளியில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பினர்.

முகமது ரிகாஸ் என்ற சர்வ தேச போதைப்பொருள் கடத்தல்காரர், வாட்ஸ் ஆப் அழைப்பில், தென் ஆப்ரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள, கடத்தல் புள்ளிகளுடன் பேசியுள்ளார். இந்த தகவல், மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.


'ஏர்கூலர்'


இது தொடர்பாக, 2018ல், சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, கைதிகளிடம் இருந்து ஏழு மொபைல் போன்கள் மற்றும், 'மெமரி கார்டு'களை பறிமுதல் செய்தனர்.

தற்போதும், தமிழக சிறைகளில் கைதிகளுக்கு சகல வசதிகளும் கிடைக்கின்றன. பீடி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கிடைப்பதில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை. கைதிகளிடம் மொபைல் போன் புழக்கம் அதிகமாக உள்ளது. 'ஏர்கூலர்' வசதியுடன் கைதிகள் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தகவல் கசிவு


இதையடுத்து, 600க்கும் மேற்பட்ட போலீசார், சிறைத்துறை அதிகாரிகள் இணைந்து, புழலில் உள்ள இரண்டு மத்திய சிறைகள், வேலுார், கடலுார், சேலம், கோவை, பாளையங்கோட்டை, மதுரை, திருச்சியில் உள்ள மத்திய சிறைகளில் மோப்ப நாய் உதவியுடன் கைதிகளின் அறைகள், குளியல், கழிப்பறை, சமையல் கூடம் என, ஒரு இடம் கூட விடாமல் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

இந்த சோதனை குறித்து, முன்கூட்டிய தகவல் கசிந்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால், சோதனை எதிர்பார்த்த அளவிற்கு பலன் அளிக்கவில்லை என, சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravikumark - Chennai,இந்தியா
07-ஆக-202120:50:31 IST Report Abuse
ravikumark It has been happening for ages. Always there are blacks sheep's in all the government departments. It is a sorry state of affairs that criminals are enjoying Royal life in jails.
Rate this:
Cancel
07-ஆக-202112:40:52 IST Report Abuse
Ambalavanan Gomathinayagam PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
07-ஆக-202108:10:45 IST Report Abuse
VENKATASUBRAMANIAN என்னமோ இப்போதுதான் நடக்கிற மாதிரி கூறுகின்றனர். ஷாப்பிங்கே போய் வரமுடியும். எங்கு வேண்டுமானாலும் பேசமுடியும். என்ன வேண்டுமானாலும் கிடைக்கும். இன்று வரை ஒரு நடவடிக்கையும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X