அரசியல் செய்தி

தமிழ்நாடு

தஞ்சையில் பா.ஜ.,வினர் கைது: விடுவிக்க கோரி போராட்டம்

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
தஞ்சாவூர் : மாநகராட்சி ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பா.ஜ.,வினர் இருவரை, போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி, பா.ஜ., தலைவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர்.கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக, தஞ்சையில் நேற்று பா.ஜ., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதற்காக, எலிசா நகரில் 'பிளக்ஸ் பேனர்' வைத்திருந்தனர். மிரட்டல்அனுமதியின்றி
தஞ்சை  பா.ஜ., கைது,   போராட்டம்

தஞ்சாவூர் : மாநகராட்சி ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பா.ஜ.,வினர் இருவரை, போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி, பா.ஜ., தலைவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர்.

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக, தஞ்சையில் நேற்று பா.ஜ., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதற்காக, எலிசா நகரில் 'பிளக்ஸ் பேனர்' வைத்திருந்தனர்.


மிரட்டல்


அனுமதியின்றி பேனர் வைத்திருப்பதாகக் கூறி, நேற்று முன்தினம் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையிலான ஊழியர்கள் அகற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் தகராறில் ஈடுபட்டனர். தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இளங்கோ உள்ளிட்டவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக, நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், மருத்துவக் கல்லுாரி போலீசில் புகார் அளித்தார்.

இதன்படி, 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, லால்குடியைச் சேர்ந்த தெற்கு மண்டல தலைவர் அசோக்குமார், 44, அறந்தாங்கி நகர செயலர் இளங்கோவன், 33, ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., - சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.,வினர், கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவிக்கக் கோரி, நேற்று தஞ்சாவூர்கலெக்டர் அலுவலகம் முன் குவிந்தனர். எஸ்.பி., ரவளிபிரியா பேச்சு நடத்தியதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மாநகராட்சி அதிகாரிகள் அனுமதியின்றி பிளக்ஸ் வைக்கப்பட்டதாக கூறியதால், பா.ஜ.,வினரே அகற்றுவதாக கூறியுள்ளனர். ஆனால், போலீசாரும், அதிகாரிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, இரவில் வீட்டிற்கு சென்று கட்சியினரை கைது செய்துள்ளனர். அவர்களை எங்கு கொண்டு சென்றனர் என தெரியவில்லை.பயங்கரவாதிகளை கூட இவ்வளவு ரகசியமாக கொண்டு போயிருக்க முடியாது. போலீசார் மறைக்கின்றனர். இது, மனித உரிமை மீறல்.


'எமர்ஜென்சி'


குடிநீருக்காக போராடும் போது, குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது தவறு என வழக்கு தொடுக்கின்றனர் என்றால், தவித்த வாய்க்கு தண்ணீர் தராத பாவத்தை, இந்த அரசு செய்வதாக கருதுகிறேன். 'எமர்ஜென்சி' காலத்தில், தி.மு.க.,வினரின் கரை வேட்டி எங்கு போனது என்பது எங்களுக்கும் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.


அண்ணாமலை மீது வழக்கு


கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூரில் நேற்று முன்தினம், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தஞ்சை தெற்கு, மேற்கு, மருத்துவக் கல்லுாரி ஆகிய மூன்று போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், அனுமதியின்றி மாட்டு வண்டி ஊர்வலம், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகவும், கொரோனா தொற்று ஏற்படும் வகையில் செயல்பட்டதாகவும், அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள் உட்பட 1,260 பேர் மீது, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து
உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
07-ஆக-202122:39:19 IST Report Abuse
Rajas /////மாநகராட்சி அதிகாரிகள் அனுமதியின்றி பிளக்ஸ் வைக்கப்பட்டதாக கூறியதால், பா.ஜ.,வினரே அகற்றுவதாக கூறியுள்ளனர்.//// பொன்.ராதாகிருஷ்ணனே சொல்லி விட்டார். அனுமதி இல்லாமல் பிளக்ஸ் வைக்கப்பட்டு இருந்ததாக
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-ஆக-202121:23:33 IST Report Abuse
sankaseshan Mr. Pukazh don't you know your favorite dmdk has done this past without obtaining police permission?
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
07-ஆக-202118:34:24 IST Report Abuse
Tamilan தற்குறிகள் எல்லாம் ஜபிஎஸ் பற்றி பேசுகிறது....இது என்ன கருனை அடிப்படையில் நியமிக்கப்படும் வாத்தியார் வேலையா? அல்லது அலுவலக உதவியாளர் வேலையா? .....கொடுமையடா சாமி......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X